Thursday, July 30, 2015

ராணுவ மரியாதையுடன் மண்ணில் விதைக்கப்பட்டார் ஏவுகணை மனிதர்: பிரதமர் மோடி - ராகுல் இறுதி அஞ்சலி!!

Thursday, July 30, 2015
கலாம் அடக்கம் செய்யப்பட்ட கபர் அருகே குடும்ப உறுப்பினர்கள் துவா ஓதி பிரார்த்தனை-அப்துல் கலாமுக்கு பாதுகாப்புப் படையினர் இறுதி இசை அஞ்சலி-மக்களின் ஜனாதிபதி மக்களிடம் இருந்து இறுதி விடைபெற்றார்-மகத்தான மாமனிதரை மண்ணுக்குள் விதைத்தோம்...-ஆயிரக்கணக்கான மக்கள் அப்துல் கலாம் வாழ்க கோஷம்
 
-முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது-ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் முழு அரசு மரியாதையுடன் கலாம் புகழுடல் நல்லடக்கம்-மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்த அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது-கலாமின் உடல் முப்படை வீரர்களால் தூக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு-கலாமின் குடும்ப உறுப்பினர்கள் துவா ஓதி பிரார்த்தனை -அப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்-இஸ்ரோ, டிஆர்டிஓ அதிகாரிகள் கலாமுக்கு இறுதி அஞ்சலி -கலாமின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றம்-தேசியக் கொடியை முப்படை வீரர்கள் 6 பேர் ராணுவ மரியாதையுடன் எடுத்துச் சென்றனர்
 
இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்தது-சிறிது நேரத்தில் அப்துல் கலாம் உடல் அடக்கம்-அரசியல் தலைவர்கள் அமர்ந்த மேடையை தவிர்த்து கலாம் குடும்பத்தினருடன் வைகோ-பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா அஞ்சலி -வைகோ மலர் தூவி கலாமுக்கு இறுதி அஞ்சலி-விஜய்காந்த், பிரேமலதா, சுதீஷ் மலர் தூவி அஞ்சலி -அன்புமணி, ஜி.கே.மணி அப்துல் கலாமுக்கு அஞ்சலி-இளங்கோவன், திருநாவுக்கரசர், வாசன், திருமாவளவன் மலர் தூவி அஞ்சலி-கேரள முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி-வரிசையில் நின்று ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி-குலாம்நபி ஆசாத், ஷானவாஸ் ஹூசேன் பாத்திஹா ஓதி அஞ்சலி-ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா அஞ்சலி-முப்படைத் தளபதிகளும் கலாம் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி
 
காங். துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலாமுக்கு இறுதி வணக்கம்-அப்துல் கலாம் உடலுக்கு கவர்னர் ரோசைய்யா, பாதுகாப்பு அமைச்சர் பரிக்கர் மலர் தூவி அஞ்சலி-அமைச்சர் பன்னீர்செல்வமும் மலர் தூவி அஞ்சலி-ஆளுநர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சர்கள் கலாம் உடலுக்கு இறுதி வணக்கம் -கலாமின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி -அப்துல் கலாம் உடலை கும்பிட்டபடி வலம் வந்தார் மோடி -அடக்க ஸ்தலத்தில் வைக்கப்பட்டது கலாமின் உடல் -இரு நிமிடம் மெளன அஞ்சலி அனுசரிப்பு -முப்படை வீரர்கள் கலாமின் உடலை அடக்க ஸ்தலத்துக்கு ஏந்தி வருகின்றனர் -கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி -பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று இறுதி வணக்கம் செலுத்தினர் -பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி வணக்கம் செலுத்தி மக்கள் ஜனாதிபதிக்கு இறுதி விடை அளித்தனர்
 
கலாம் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மத்திய, தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு - கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் உம்மன் சாண்டி., ஆந்திரா முதல்வர் சந்திரபாபு பங்கேற்பு - ராணுவ வாகனத்தில் பேக்கரும்பு கிராமத்துக்கு ஊர்வலமாக கலாம் புகழுடல் செல்கிறது - பள்ளிவாசலில் இருந்து பேக்கரும்பு நோக்கி கலாமின் கடைசிப் பயணம் - லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி பிரியா விடை - சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்து மலர்தூவி மக்களின் ஜனாதிபதிக்கு இறுதி விடை கொடுத்தனர் - ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கலாமின் உடல் - வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பூக்களைத் தூவி அஞ்சலி - அப்துல் கலாம் அடக்கப்படும் செய்யும் பேக்கரும்பில் தலைவர்கள் குவிந்தனர்
 
துயில் கொள்ள புறப்பட்டது மக்கள் ஜனாதிபதி கலாம் உடல் - ராணுவ மரியாதையுடன் ஊர்வலம் - வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி -பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் புறப்பட்டார் -பள்ளிவாசலில் இருந்து பேக்கரும்பு கிராமத்துக்கு கலாம் உடல் எடுத்து செல்லப்படுகிறது -கலாம் உடலுக்கு பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை -தொழுகைக்குப் பின்னர் பேக்கரும்பு கிராமத்துக்கு கலாம் புகழுடல் எடுத்துச் செல்லப்படுகிறது -சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் பிரதமர் மோடி -கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார் மக்கள் மனதில் விதைக்கப்படுவார் கலாம் - இன்று காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்! -பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை முடிந்த பின் உடல் இறுதிச் சடங்கு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் -வீட்டில் கண்ணீர்மல்க கலாமுக்கு பிரியாவிடை கொடுத்தனர்
 
 உறவினர்கள் -முப்படை வீரர்கள், உறவினர்கள் உடலை ஏந்தி பள்ளிவாசல் செல்கின்றனர் -கலாமின் உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது -திருச்சியிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் -ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் -கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டத்தில் திணறுகிறது ராமேஸ்வரம் -மிக பலத்த பாதுகாப்புப் பணியில் ராணுவம், போலீசார் -சிறிது நேரத்தில் அப்துல் கலாமின் உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படும் -ஜனாஸா தொழுகைக்குப்பின் உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் -இதையடுத்து முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் -உடலை பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்ல ராணுவ வீரர்கள் கலாம் இல்லம் வந்தனர்

No comments:

Post a Comment