Friday, July 24, 2015

தற்போதைய அரசாங்கம் கூறிய எதுவும் முன்னெடுக்கப்படவில்லை: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Friday, July 24, 2015
தற்போதைய அரசாங்கம் தற்சமயம் பல்வேறுப்பட்ட பொய் பிரசாரங்களை முன் எடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த நாட்களில் பாரிய பொய்யான பிரசாரங்கள்
அன்று கூறிய ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என தயவு செய்து கூறுங்கள்.

நீர்விநியோக திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொழில் வாய்பின்றி இருக்கிறார்கள்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அபிவிருத்திகளை நாங்கள் ஆட்சியேற்று சில நாட்களிலே முன் எடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்...

முகநூலின் ஊடாக நடைபெற் கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்ற போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய கொள்கைகளுடன் நாட்டின் அபிவிருத்திக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் 8ம் திகதிக்குப் பின்னர் மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டம் கைவிடப்பட வேண்டுமென  அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கொள்கைகளுடன் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புதிய தேர்தல் விஞ்ஞாபனமொன்றை முன்வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.     
 
மஹிந்த சிந்தனை கொள்கை கைவிடப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment