Friday, July 24, 2015

நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடரும் - மஹிந்த:- பதவி விலகினார் ஜனக்க பண்டார தென்னகோன்!

Friday, July 24, 2015
ஆளும் அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

100 நாட்களில் இந்த நாட்டை வீணாக்கியுள்ளனர்.

வேகமாக இடம்பெற்று வந்த அபிவிருத்திகளை நிறுத்தி, பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறது.

இன்னும் நாள் சொல்ல நாள்சொல்ல பொருட்களில் விலைகளை குறைக்கவும், அதனை இலவசமாக வழங்கவும் தேர்தலின் நிமித்தம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் குறிப்பிடடுள்ளார்.             
மாகாண சபைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தம்புல்லையில் அவரது வீட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment