Saturday, July 18, 2015

ராமேசுவரம் மீனவர்கள் 14 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

Saturday, July 18, 2015
ராமேசுவரம்:ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நிசாந்த், அருளானந்தம், புயல்பாண்டி ஆகிய 3 பேருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.

கடந்த 47 நாட்களாக இலங்கை சிறையில் தவித்து வரும் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரும் 5-வது முறையாக நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வருகிற 30-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீனவர்கள் குடும்பத்தினர் மனவேதனை அடைந்து 14 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment