Tuesday, June 2, 2015

சர்வதேச நிறுவனத்தின் ஆசிய பாதுகாப்பு !

Tuesday, June 02, 2015
14 வது பாதுகாப்பு கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் ஆசிய பாதுகாப்பு உச்சி மகா நாட்டின்- சங்ரி லா டயலொக் 2015 க்கான நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சர்கள்,பாதுகாப்புச் செயலாளர்கள் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வருகை தந்த இன்னும் பல முக்கிய பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் தற்போது சிங்கப்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
 
மேலும் சக்தி, பிராந்திய ஒற்றுமை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை கவனத்திற் கொண்டு உச்சி மகா நாட்டின் முக்கியதுவத்தை சிங்கபூர் நாட்டின் கௌரவ பிரதமர் அவர்கள் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து ஜக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றுகையில்; ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட பிராந்திய கட்டிடக்கலை அவசியம் எனவும் அதன் மூலம் ஆசிய பசிபிக் பிராந்திய மக்கள் மற்றும் நாடுகளுக்கு வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
 
அத்துடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்தன அவர்கள் தலைமையில் சென்ற இலங்கைக்கான பிரதிநிதிகள் ஜெனரல் ப்ரவிட் வொங்சுவான்( டழ்ஹஜ்ண்ற் ரர்ய்ஞ்ள்ன்ஜ்ர்ய்), தாய்லாந்து நாட்டின் துணை பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு அமைச்சர், ஆர்டி.கெளரவ மைக்கேல் பலோன், ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்புச் செயலாளர்,கொளரவ (கன்ண் பன்ஸ்ரீந் வங்ஜ்), சிங்கப்பூர் நாட்டின் 2 வது பாதுகாப்பு அமைச்சர் ஆகிய பிரதிநிதிகளை சந்தித்தனர் அத்துடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ இந்ரஜிட் சிங் அவர்களை சந்தித்து இரு நாடுகளினதும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் தற்போதய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகள் பற்றியும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் விளக்கமளிக்கப்பட்டது.
 
மேலும் பாதுகாப்புச் செயலாளர் திரு பிஎம்யூடி பஸ்நாயக அவர்களும் தமது பிரதிநிதிகளுடன் சிங்கபூர் நாட்டின் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்து இரு நாடுகளினதும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, இராணுவ கட்டளை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல்ஏடபள்யூஜேசி சில்வா, இலங்கை கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன, இலங்கை விமானப்படையின் பிரதானி எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள,சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு அலுவல்களுக்கான துணை செயலாளர் மற்றும் இலங்கை நாட்டின் சிங்கபூருக்கான பதில் ஆணையாளர் ஆகியேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment