Thursday, June 4, 2015

ரொறொன்ரொ ஹொட்டேல் ஒன்றில் 12வயது சிறுவன் கொடூரமாக குத்தி கொலை !

Thursday, June 04, 2015
கனடா- ரொறொன்ரோ டவுன் ரவுன் மையத்தில் அமைந்துள்ள ஹொட்டேல் அறையொன்றினுள் 12வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக கத்தியால் குத்திக்கொல்லப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை அதிகாலை இததுயர்சம்பவம் நடந்துள்ளது.
டவுன் ரவுனில் றிச்மன் மற்றும் விக்டோரியா வீதிகளிற்கு அண்மையில் அமைந்துள்ள Cambridge Suites Hotel உள்ளே எட்டாவது மாடியில் நடந்த இந்த சம்பவத்தில் சிறுவனின் கழுத்தில் குத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத மனிதன் ஒருவர் இக்கொலை சம்பந்தமாக பொலிசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிகாலை 5.49மணியளவில் அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் அழைக்கப்பட்டு சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டான். அங்கு அவன் இறந்து விட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசார் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்

No comments:

Post a Comment