Wednesday, May 20, 2015

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாடு குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்: பிவித்துரு ஹெல உறுமய!

Wednesday, May 20, 2015
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாடு குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.
 
இராணுவ சூழ்ச்சித் திட்டமொன்றின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முயற்சிக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
 
இந்த முறைப்பாடு குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலைமையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோர உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
இந்த விசாரணைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இன்று உதய கம்மன்பில உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரை சந்திக்க உள்ளனர்.
 
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி இராணுவ சூழ்ச்சித் திட்டமொன்றின் மூலம் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முயற்சித்தார் என ஜனவரி மாதம் 14ம் திகதி வெளிவிவகார அமைச்சர் புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment