Friday, January 09, 2015
இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன , உச்ச நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சற்றைக்கு முன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் வைபவத்திலேயே அவர் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவியேற்றார் .
அத்துடன், புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்
No comments:
Post a Comment