Wednesday, January 7, 2015

ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பெட்டிகள் இன்று காலை சகல வாக்கெடுப்பு நிலையங்களுக்கு!

Wednesday, January 07, 2015
இலங்கை::
நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்று நுவரெலியா மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குச் சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
 
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை 534150 வாக்காளார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் 13615 பேர் தபால் மூல வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
 
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளில் 423 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 302836 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
 
கொத்மலை தேர்தல் தொகுதியில் 78068 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 82193 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 71053 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
 
இதனடிப்படையில் நுவரெலியா, மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 213 வாக்களிப்பு நிலையங்களும் கொத்மலை தேர்தல் தொகுதியில் 73 வாக்களிப்பு நிலையங்களும் வலப்பனை தேர்தல் தொகுதியில் 71 வாக்களிப்பு நிலையங்களும் அத்தோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 
அத்துடன் 10 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களில் 5100 பேர் கடமையாற்றவுள்ளதோடு வாக்கு எண்ணும் நிலையங்களில் 1600 பேர் கடமையில் ஈடுப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment