Wednesday, January 7, 2015

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க கொழும்பு பல்கலையின் கணினிப் பிரிவு ஏற்பாடு!

Wednesday, January 07, 2015
இலங்கை::
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை இராஜகிரிய தேர்தல்கள் செயலகத்திலிருந்து உடனுக்குடன் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினிப் பிரிவு மேற்கொண்டுள்ளதாக அப்பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் கிஹான் விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

 தற்சமயம் தனது கணினிப் பிரிவு இருபது பிரதான ஊடகங்களுடன் இணைய வழி தொடர்பு வசதிகளைக் கொண்டிருப்பதாகவும் தேர்தல்கள் செயலகத்தால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட முடிவுகளை அங்கிருந்தே உடனுக்குடன் தெரிவிப்பதற்காகத் தனது பிரிவின் 70 தொடக்கம் 80 உத்தியோகத்தர்கள் அங்கு பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் பேராசிரியர் கிஹான் விக்கிரமநாயக்க மேலும் தெரிவித்தார்.

 இந்தச் சேவை தேவைப்படும் ஊடகங்கள் தேர்தல்கள் செயலகத்துடன் பதிவுசெய்து கொள்வதன்மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

No comments:

Post a Comment