Wednesday, January 07, 2015
இலங்கை::நுவரெலியாவிலிருந்து கினிகத்தேனை – மினுவன்தெனிய நோக்கி வாக்குபெட்டியை கொண்டு சென்ற ஜீப் ரக வாகனம் ஒன்று வட்டவளை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை::நுவரெலியாவிலிருந்து கினிகத்தேனை – மினுவன்தெனிய நோக்கி வாக்குபெட்டியை கொண்டு சென்ற ஜீப் ரக வாகனம் ஒன்று வட்டவளை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விபத்தில் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த 3 தேர்தல் கடமை உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு பதிலாக 3 தேர்தல் கடமை உத்தியோகத்தர்களையும் வாகனம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரையும் நியமிப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைனளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment