Tuesday, January 13, 2015

எங்களது போராட்டங்களை அன்றுபோல் எதிர்காலத்திலும் ஒரு அடிகூட பின்வாங்காமல் முன்னெடுப்போம்: பொதுபல சேனா!

Tuesday, January 13, 2015      
இலங்கை::போராட்டங்களை அன்றுபோல் எதிர்காலத்திலும் ஒரு அடிகூட பின்வாங்காமல் இதற்குப்பிறகும் முன்னெடுப்போம் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
 
நேற்று கொழும்பில் பொதுபல சேனா தலைமையத்தில் இடம்பெற்ற ஊடகவியல் மாநாட்டின் போது பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
 
நாங்கள் தேசிய இயக்கம் ஒன்றை நடத்திச் செல்கின்றோம். எங்களுக்கு சுயாதீனமாக இருந்திருக்க முடியும். கடைசி தருனத்தில் எங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு ஆதரவு வழங்க நேரிட்டது. இதற்கான காரணம் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மற்றும் புலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாதிகள் மைத்திரியுடன் இணைந்திருந்ததாகும்.
 
என்றாலும் நாங்கள் தற்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் நாட்டில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட சிங்கள பொளத்தர்களுக்கு கூடுதலாக பாதிக்கப்பட்ட பிரச்சினைகளை சொல்வதற்கு எங்களுக்கு குழு ஒன்று நியமித்து தாருங்கள்.
 
இந்த நாட்டில் புத்தர் மனித இறைச்சி சாப்பிட்டவர் என்று கூறியவறுக்கு என்ன தண்டனை? இது தொடர்பில் நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் போராடினோம். இந்த அரசாங்கத்திலும் இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.
 
ஹலால், ஷரீஆ வங்கி மற்றும் நிகாப் தொடர்பாக இவர்கள் என்ன சொல்கிறார்கள்? வில்பத்து காட்டை வெட்டியர்களுக்கு தண்டனை கிடைக்குமா? மற்றும் மன்னாரில் இடம் பெற்ற காணி அபகரிப்பு போன்றவற்றவற்றுக்கு தண்டனை வழங்கப்படுமா? போன்ற கேள்விகளை எழுப்பினார்.

No comments:

Post a Comment