Tuesday, January 20, 2015
இலங்கை::ரோம் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடாததால் நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து வெளியார் தலையீடு செய்து விசாரணை செய்ய முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சட்டமா அதிபர்கள் மாநாடு நேற்று ஆரம்பமானது. இம்மாநாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடந்தும் உரையாற்று கையில்,
ஐரோப்பிய நாடுகளைப் போன்று ஆசிய நாடுகளின் சட்டமா அதிபர்கள் அரசியல்
மயப்படுத்தப்படவில்லை என்றாலும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் முதலாவது சட்ட மா
அதிபர் இலங்கையிலே உருவாகினார். ஆசியாவிலேயே முதலாவது உச்ச நீதிமன்றம்
இலங்கையில் 1802 இல் ஸ்தாபிக்கப்பட்டது.
19வது திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளோம். தற்போது இத்திருத்தம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே செயற்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மீளப் புத்துயிர்
ஊட்டவுள்ளோம். அத்தோடு நீதித்துறைக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும்.
இவை அனைத்தும் இத்திருத்தத்தின் ஊடாக இடம்பெறும்.அதேநேரம் சாட்சிகளைப்
பாதுகாப்பதற் கான சட்டம், தகவலறியும் உரிமை தொடர்பான சட்டம், கணக்காய்வு
தொடர்பான சட்டம் என்பனவும் விரைவில் பாராளுமன்றத்திற்குக் கொண்டு
வரப்படும். இவற்றை விரை வாக மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சருக்கு ஆலோசனை
வழங்கியுள்ளேன்.
மேலும் நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கும் வகையில்
மேற்பார்வை குழுவையும் நிதிக் குழுவையும் அமைக்கவுள்ளோம். இன்னும் பல
விடயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.நாம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுடன்
இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு சாதகமான தீர்வுகளுக்கு வரவும்
எதிர்பார்க்கின்றோம்.
சட்டம் ஒழுங்கை மதித்து நீதியைக் கெளரவிக்கும் சமூகம் வாழும் நாடாக
இந்நாட்டை மீண்டும் நாம் கட்டியெழுப்புவோம். ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும்
முதலில் நீதித்துறை அறிமுகப்படுத்தப்பட்ட இந்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை
மீண்டும் கொண்டு வர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். என்றும் அவர்
கூறினார்.

http://www.worldcup2015livenews.com/
ReplyDeletehttp://www.valentinesday2015giftideas.com/
http://www.republicday2015speech.com/