Sunday, January 11, 2015

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா முதல் வெளிநாட்டுப் பயணமாக அடுத்த மாதம் இந்தியா வருகை!

Sunday, January 11, 2015      
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபாலா சிறீசேனா அந்நாட்டின் புதிய அதிபராக நேற்று முன் பதவி ஏற்றுக் கொண்டார்.

நூறே நாட்களில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக சபதம் ஏற்றுள்ள சிறீசேனா
மேலும், நாட்டை விட்டு வெளியேறிய அதிருப்தியாளர்களையும், பத்திரிகையாளர்களையும் உடனடியாக இலங்கைக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபாலா சிறீசேனா பொறுப்பேற்றவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு முதன்முதலாக டெலிபோன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இலங்கையின் அதிபர் என்ற முறையில் முதல் வெளிநாட்டுப் பயணமாக அடுத்த மாதம் மைத்ரிபாலா சிறீசேனா இந்தியாவுக்கு வரக்கூடும் என அரசின் புதிய செய்தி தொடர்பாளரான ரஜிதா சேனராத்னே இன்று தெரிவித்ததாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment