Wednesday, January 7, 2015

யாழில் பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு!

Wednesday, January 07, 2015
இலங்கை::
ஜனாதிபதித் தேர்தல் நாளை  இடம்பெறவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்  செல்லப்படுகின்றன.  யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை 9 மணிமுதல் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.   

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்கத்  தகுதி பெற்றுள்ளனர்.  யாழ். மாவட்டத்தில் 526 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, 36 பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களும் 8 தபால் மூலமான வாக்குகள் எண்ணும் நிலையங்களும் என மொத்தமாக 44 வாக்கெண்ணும் நிலையங்கள்  செயற்படவுள்ளன. 


No comments:

Post a Comment