Saturday, January 17, 2015
*ஐ.மு., கூட்டணி அரசின், 10 ஆண்டு கால சாதனைகள் மக்களை சென்றடைய வில்லை. அதுவே, லோக்சபா தேர்தல் தோல்விக்கும், சட்டசபை தேர்தல்களின் தோல்விக்கும் காரணம். அதனால், காங்கிரஸ் அரசின் சாதனைகள் மக்களை சென்றடைய, கட்சித் தலைவர்கள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*சமூக வலைதளங்கள் மூலமும், காங்கிரசின் உழைப்பையும், சாதனைகளையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
*மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் குறைபாடுகளை, மக்களிடம் அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டும். மக்களுக்கு புரியும் வகையில், அவற்றை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
*'ஜன் தன்' போன்ற ஒன்றிரண்டு திட்டங்களையே, தற்போதைய மத்திய அரசு அமல்படுத்தினாலும், ஊடகங்கள் வாயிலாக அதை பெரிய அளவில் விளம்
பரப்படுத்திக் கொள்கிறது. அதேபோல, காங்கிரசின் சாதனைகளும் மக்களை சென்றடைய நடவடிக்கை அவசியம்.
*மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் உரையாடி, நாமும் அவர்களில் ஒருவர் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலமே காங்., கட்சியை மீண்டும் எழுச்சி பெற வைக்க முடியும்.
*இதுபோன்ற பல யோசனைகளையும் பிரியங்கா தெரிவித்தார்.
புதுடில்லி:மக்களின் நாடித்துடிப்பை அறிய காங்கிரஸ் தவறி விட்டது. எனவே, காங்.,
தலைவர்கள் எல்லாம், மக்களோடு மக்களாக கலந்து அவர்களுக்காக போராட வேண்டும்;
குரல் கொடுக்க வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
அப்போது தான் காங்கிரஸ் புத்துயிர் பெறும்,'' என, சோனியாவின் மகள்
பிரியங்கா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், அடுத்ததாக, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களிலும் தோல்வியையே தழுவியது. அத்துடன், இவற்றில், இரண்டு மாநிலங்களில், ஆட்சியைப் பறிகொடுத்து உள்ளது.

திணறல்:
லோக்சபா
தேர்தல் நேரத்தில் உருவான மோடி அலை, இன்னும் வீசிக் கொண்டிருப்பதால், அதை
முறியடிக்க என்ன செய்வது என, காங்கிரஸ் தலைவர்கள் திணறிக்
கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், கட்சித் தலைவர் பதவிக்கு பிரியங்காவை
நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், ஆங்காங்கே வலுப் பெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், லோக்சபா தேர்தலுக்குப் பின், தன் தாயார் சோனியாவின்
தொகுதி யான ரேபரேலிக்கு முதல் முறையாக சென்ற பிரியங்கா, தொகுதி மக்களிடம்
குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் நடைபெற்ற கட்சியின் முக்கிய தலைவர்கள்
கூட்டத்தில் பேசிய அவர், சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
பிரியங்கா பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பிரியங்கா பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
காங்.,
தலைவர்கள் நாட்டு மக்களின் நாடித்துடிப்பை அறிந்து செயல்பட தவறி விட்டனர்.
கட்சியின் மூத்த தலைவர்கள் முதல், அடிப்படை உறுப்பினர்கள் வரை அனைவரும்,
பொதுமக்களிடம் சகஜமாக பழக வேண்டும். நம்பிக்கை வரும்கூட்டத்தோடு கூட்ட மாக
கலந்து, அவர்களுடன் உரையாட வேண்டும். பாரம்பரியமிக்க காங்., கட்சியினர்,
எளிமையானவர்கள் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அவர்களுக்கு
நம்பிக்கை வரும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருந்து மக்கள்
என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை, நான் அறிய முற்படவில்லை. அப்படி அறியாத
போது, அவர்களுக்காக நாம் என்ன செய்ய முடியும். எனவே, காங்., தலைவர்கள்
மக்கள் பிரச்னைகளுக்காக போராட வேண்டும்; அவர்களுக்காக குரல் கொடுக்க
வேண்டும்; அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். அப்போது தான்
காங்கிரஸ் புத்துயிர் பெறும். இவ்வாறு, பிரியங்கா பேசியதாக காங்.,
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கிடையில், 'உடல் நிலையை கருத்தில் கொண்டு,
காங்., தலைவர் சோனியா கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலக வேண்டும். கட்சியை
வலுப்படுத்த, தலைவர் பொறுப்பை ராகுலிடம் வழங்க வேண்டும்' என, கட்சியின்
பொதுச்செயலர் திக்விஜய் சிங் உட்பட, முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி
உள்ளனர். ஏராளமான தொண்டர்களும் இதையே விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில், ராகுல் தலைவராக
அறிவிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
விருப்பம்:
ஆனால்,
அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், கூட்டத்தில்,
பெரும்பாலான தலைவர்கள், ராகுல் தலைமையின் கீழ் செயல்பட விருப்பம்
தெரிவித்து உள்ளனர். எனவே, இந்த ஆண்டு மத்தியில், அதாவது, ஜூலை
மாதத்திற்குள், காங்., தலைவர் சோனியா, கட்சியின் அனைத்து
பொறுப்புகளிலிருந்தும் விலகி, ராகுலை தலைமை ஏற்க செய்வார். பின், அவரின்
வழிகாட்டுதல்படி, ராகுல் செயல்படுவார் என, கட்சி மேலிட வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
சாதனைகள் மக்களை சென்றடையவில்லை
சாதனைகள் மக்களை சென்றடையவில்லை
*ஐ.மு., கூட்டணி அரசின், 10 ஆண்டு கால சாதனைகள் மக்களை சென்றடைய வில்லை. அதுவே, லோக்சபா தேர்தல் தோல்விக்கும், சட்டசபை தேர்தல்களின் தோல்விக்கும் காரணம். அதனால், காங்கிரஸ் அரசின் சாதனைகள் மக்களை சென்றடைய, கட்சித் தலைவர்கள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*சமூக வலைதளங்கள் மூலமும், காங்கிரசின் உழைப்பையும், சாதனைகளையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
*மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் குறைபாடுகளை, மக்களிடம் அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டும். மக்களுக்கு புரியும் வகையில், அவற்றை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
*'ஜன் தன்' போன்ற ஒன்றிரண்டு திட்டங்களையே, தற்போதைய மத்திய அரசு அமல்படுத்தினாலும், ஊடகங்கள் வாயிலாக அதை பெரிய அளவில் விளம்
பரப்படுத்திக் கொள்கிறது. அதேபோல, காங்கிரசின் சாதனைகளும் மக்களை சென்றடைய நடவடிக்கை அவசியம்.
*மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் உரையாடி, நாமும் அவர்களில் ஒருவர் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலமே காங்., கட்சியை மீண்டும் எழுச்சி பெற வைக்க முடியும்.
*இதுபோன்ற பல யோசனைகளையும் பிரியங்கா தெரிவித்தார்.

No comments:
Post a Comment