Thursday, January 22, 2015
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 57 பேர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 57 பேர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சம்பந்தப்பட்ட தூதுவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இலங்கையின் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 54 பேரில் இலங்கை வெளிநாட்டு சேவையில் பணியாற்றிய ஊழியர்களில் 10க்கும் குறைவான ஊழியர்களே தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஏனைய அனைவரும் அரசியல் ரீதியான நியமிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
நியூயோர்க்கிற்கான துணை வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன, துருக்கிக்கான தூதுவர் பாரதி விஜேரத்ன, ஜப்பானுக்கான தூதுவர் வசந்த கரன்னாகொட, அவுஸ்திரேலியாவுக்கான தூதுவர் திசர சமரசிங்க, சுவிடனுக்கான தூதுவர் ஓஷிடி அழகபெரும, மாலைத்தீவுக்கான தூதுவர் டிக்சக் தேல, இத்தாலிக்கான தூதுவர் கரு ஹகவத்த, இஸ்ரேலுக்கான தூதுவர் மொனால்ட் பெரேரா, தாய்லாந்துக்கான தூதுவர் சாந்த கோட்டேகொட, சிங்கப்பூருக்கான தூதுவர் பேரியல் அஸ்ரப் ஆகியோர் அரசியல் ரீதியான நியமிக்கப்பட்ட தூதுவர்களாவர்.
இவர்களை தவிர வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்களும் திருப்பி அழைக்கப்பட உள்ளனர்.

No comments:
Post a Comment