Friday, December 12, 2014
சென்னை::ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய இருவருக்கும் மீனவர்
பிரச்சினையில் பா.ஜ.க.வை குற்றஞ்சாட்டுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை
என்று தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை கமலாலயத்தில் நேற்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகனராஜூலு, மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ஜெய்சங்கர், காளிதாஸ், மத்திய சென்னை மாவட்ட வர்த்தக அணி தலைவர் லலித் ஜெயின், மகளிரணி மாவட்ட தலைவர்கள் ரமா, லலிதா, சைதை பகுதி தலைவர் மார்க்கெட் தேவராஜ் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
இதற்கிடையில் தமிழக பா.ஜ.க. வர்த்தகப்பிரிவு மாநில தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் எம்.பி. நரசிம்மன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எல்லா பிறந்தநாளையும் விட இந்த ஆண்டு மகாகவி பிறந்தநாள் தமிழக மக்களுக்கு இன்னும் மனநிறைவை கொடுக்கிறது. ஏனென்றால் சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் நம் தேசியகவியின் பிறந்தநாளை தமிழக மக்கள் மட்டுமே கொண்டாடி கொண்டு இருந்தோம்.
ஆனால் இன்று வடஇந்திய மக்களும், அங்கு படிக்கும் பள்ளிக்குழந்தைகளும் கொண்டாடுகின்ற அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஏற்பாடை பா.ஜ.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் ஆட்சி தமிழுக்கு எதிரான ஆட்சி என்ற பொய் குற்றச்சாட்டு மறுக்கும் அளவுக்கு தமிழ் புலவர்களின் பிறந்தநாள் வடஇந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
வங்கிகளில் நேரடி மானியம் போடப்படும் திட்டம் நல்ல திட்டம் ஆகும். ஆனால் இங்கே உள்ள கியாஸ் ஏஜென்சி அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கவனக்குறைவால் பொதுமக்கள் குழப்பமடைந்து, துன்பப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் முறையாக விண்ணப்பம் கொடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறதே? மத்திய அரசின் நடவடிக்கைகள் தான் என்ன?.
பதில்:- தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது உண்மை தான். ஏற்கனவே தூக்கு கயிறுக்கு அருகில் சென்ற 5 மீனவர்கள் மீட்டிருக்கிறோம். இப்போது கைது செய்யப்படுபவர்கள் எல்லை தாண்டுவது உள்பட வெவ்வேறு காரணங்களுக்கு கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்களை மீட்பதற்கும் வெளியுறவுத்துறை உடனே முயற்சிகளை மேற்கொள்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய இருவரும் மீனவர் பிரச்சினையில் பா.ஜ.க.வை குறைகூறுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
ஆழ்கடல் மீன்பிடிப்பு முறையை செயல்படுத்த மத்திய அரசுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கோடி வரை செலவு ஆகும். அதையும் மத்திய அரசே செய்வதற்கு தயாராக இருக்கிறது. இலங்கையிடம் ஓரளவு தான் அழுத்தம் கொடுக்க முடியும். கட்டளையாக கூற முடியாது. ஆனால் மீனவர்கள் நலனில் தொடர்ந்து மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
கேள்வி:- தமிழகத்துக்கு நரேந்திரமோடி வந்தால், கருப்பு கொடி காட்டுவேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியிருக்கிறாரே? அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?.
பதில்:- நரேந்திரமோடி உலக மக்களால் சிறந்த மனிதர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் பாரத மக்களும் அவரை சிறந்த மனிதர் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் வைகோ மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் தவறு யார் மீது இருக்கிறது என்று நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். என்றோ ஒருநாள் தமிழகம் வரும் மோடிக்கு, வைகோ கருப்பு கொடி காட்டினால், அதை பா.ஜ.க. தொண்டர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
கேள்வி:- தற்போது தமிழகத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கை எந்த அளவில் இருக்கிறது?.
பதில்:- பா.ஜ.க. மத்தியக்குழு அறிவித்தபடி, நீண்ட நாள் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 100 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதன்படி, தற்போது 10 லட்சம் உறுப்பினர்கள் அந்த முறையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 22 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் பெற்றோம். தற்போது சேர்க்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களையும் சேர்த்து தற்போது இருமடங்காக உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எங்களுடைய இலக்கான 1 கோடி உறுப்பினர்களை விரைவில் எட்டுவோம்.
கேள்வி:- பிப்ரவரியில் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுமா?.
பதில்:- நிச்சயமாக போட்டியிடும். தொண்டர்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படும். பா.ஜ.க. தலைமையிடம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் அறிவிக்கும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.

No comments:
Post a Comment