Tuesday, December 23, 2014

அமைச்சர் ரிஷாத்துக்கு வெட்கமில்லையா..?: அமீர் அலி பண்புள்ளவராயின் பதவியை ராஜினாமா செய்து நிரூபிக்கட்டும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!


Tuesday, December 23, 2014
இலங்கை::நேற்று பி.பகல் 3 மணிக்கு இரத்னபுரியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது; தேர்தல் பிரச்சார உரையின்போது

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் எதிர்தரப்புக்கு போனதை பற்றியும் அவர் அங்கு உரையாற்றினார்-

வரது உரையில்:-

முஸ்லீம் மினியாவ ரவட்டல தவ முஸ்லீம் மினியா மந்திரிக்கமக் அரக்கன ஏ பத்த அத கீலாத்தியன்னவா ஏயா கொந்த மாகாத்தியானன் ஏ மந்திரிகம தீலா யண்ட ஓனே

வெட்கமி;ல்லையா அப்பாவி முஸ்லீம் மனிதரின் பதவியை எடுத்துக்கொண்டு ஒரு முஸ்லீம் தலைவர் அவரையும் அழைத்துக் கொண்டு அந்தப் பக்கம் சென்றுள்ளார். நல்ல கௌரவ தலைவராக ‘ மாத்துருவாக’ அவர் இருந்திருந்தால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டுச் சென்றிருக்க வேண்டும். நான் என்ன செய்யலாம் எல்லாரையும் நம்பி அவர்களது விசுவாசத்தின் அடிப்படையில்தான் இதனைச்; செய்தது. முஸ்லீம் மனிதர் இன்னொரு முஸ்லீமுக்கு குழிதோண்டுகின்றார்.
 
இந்த முஸ்லீம் தலைவர் போவார் என்று எனக்குத் எப்பவோ தெரியும். இந்தத் தலைவர்கள் எல்லாம் இந்த நாட்டில் உள்ள அப்பாவி முஸ்லீம்களெல்லாம் அவர்களிடம் உள்ளனர்.
 
என்று என்னுடன் கணக்கும் வழக்குப் பேசுகின்றனர். பல சலுகைகளையும் கேட்கின்றனர். அதற்காக நான் அப்பாவி முஸ்லீம்களை இவர்களுக்கு விற்பதற்கு ஒருபோதும் துணைபோக மாட்டேன். என ஜனாதிபதி அங்கு பேசினார்.
 
 


 கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி பண்புள்ள, நல்ல மனிதராக இருந்தால் முதலில் அவருக்கு அரசாங்கம் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியூதினுடன் நேற்றைய   தினம் அரசாங்கத்திலிருந்து விலகிய அமீர் அலி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்துகொண்ட நிலையிலேயே  ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ராஜினாமா செய்ததை அடுத்து அவர் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அரசாங்கம் அமீர் அலிக்கு வழங்கியிருந்தது.

எனினும் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டு ஒருவாரங்களே கடந்த நிலையில் நேற்றைய   தினம் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுடன் கைக்கோர்த்துக்கொண்டுள்ள அமீர் அலி போன்றவர்களை எவ்வாறு நம்புவது என்று நேற்றைய தினம் இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதேவேளை அமைச்சர் ரிசாட் பதியூதின் இறுதியில் இவ்வாறான முடிவையே எடுப்பார் என்பதை தான் நன்கு அறிந்துவைத்திருந்ததாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
 
முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறான அரசியல் கட்சிகளுடன் எதிரணியினர் பெருந்தொகை பணத்தை சன்மானமாகக் கொடுத்து தம் பக்கம் இழுத்துக்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் ஒருபோதும் அவ்வாறு எவரையும் பணத்திற்காக விலை கொடுத்து வாங்க முற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment