Friday, December 12, 2014

மெரினாவில் மாயமான இலங்கை தமிழர்களின் பாஸ்போர்ட் மீட்பு!

Friday, December 12, 2014      
சென்னை : இலங்கையை சேர்ந்த தமிழ் இளம் பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் சென்னை போரூரில் சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் உறவினர் கள் ஜெர்மன் மற்றும் லண்டனில் வசிக்கின்றனர். இவர்கள், அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மெரினாவுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது, தங்களது 14 பாஸ்போர்ட்களை ஒரு கைப்பையில் போட்டு, கடற்கரையில் வைத்து விட்டு அனைவரும் கடலில் கால் நனைக்க சென்றனர். சிலர் கடலில் குளிக்கவும் செய்தனர்.
 
திரும்பி வந்து பார்த்த போது பாஸ்போர்ட் வைத் திருந்த கைப்பை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள குளிர்பானம், மீன், ஐஸ்கிரீம், டீக்கடை வைத்துள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
 
இதில், அதே பகுதியில் பொம்மை கடை வைத்திருந்த ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த சற்குணம் (40) என்ற பெண்தான் கைப்பையை எடுத்தது தெரிந்தது. விசாரணையில், ‘‘நான் திருடவில்லை. இலங்கை தமிழர்கள் கைப்பையை மறந்து சென்று விட்டனர். அவர்கள் வந்து கேட்டால் திரும்ப கொடுக்க லாம் என்று நினைத்தேன். அதற்குள் அவர்கள் காவல் நிலையம் சென்று விட்டனர்,’ என்று தெரிவித்தார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment