Thursday, December 18, 2014

புலிபயங்கரவாதத்தை நாட்டிலிருந்து நாம் இல்லாதொழித்தாலும் வெளிநாடுகளில் பயங்கரவாதம் தொடர்கிறது. பயங்கரவாதிகள் சர்வதேசத்திலிருந்து இயங்கி வருகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ!

Thursday, December 18, 2014
இலங்கை::நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து எதிர்காலத்திலும் முன்னெடுப்பதே எமது திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
 
அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளி நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயல்வோரிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க எதிர்வரும் 8ம் திகதி வெற்றிலைக்கு மக்கள் வாக்களித்து முழுமையான ஆதரவினை வழங்குவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
8ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து அமோக வெற்றியை உறுதி செய்து 9ம் திகதி நாம் அனைவரும் இணைந்து பாற்சோறு உண்வோம். மக்கள் அதற்கு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பாணந்துறையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இப்பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
 
பிரிவினை வாதிக்கும் பயங்கரவாதிகளுக்கும் நாட்டு மக்கள் வழங்கும் உறுதியான பதிலாக இம்முறை தேர்தல் அமையும். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து நாம் இல்லாதொழித்தாலும் வெளிநாடுகளில் பயங்கரவாதம் தொடர்கிறது. பயங்கரவாதிகள் சர்வதேசத்திலிருந்து இயங்கி வருகின்றனர். தனியான பாராளுமன்றத்தை அமைத்துக் கொண்டு அதற்கு அமைச்சரவையையும் நியமித்து செயற்பட்டு வருகின்றனர். இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டும்.
 
நாட்டிற்கு எதிராகச் செயற்பட்டு அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்திலும் நாம் மிக அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது. நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியாகும். அன்றைய தினம் மக்கள் காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். வெற்றிலைக்கு வாக்களித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
 
ஒன்பதாம் திகதி நாம் அனைவரும் இணைந்து பாற்சோறு சாப்பிடுவோம். நாம் பாற்சோறு உண்ண இப்போதிருந்தே தயாராவோம். நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டு அபிவிருத்தியில் கட்டியெழுப்பியு ள்ளோம். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு நாம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் எதிர்காலத்தில் முன்னெடுப் பதற்கு மக்களின் பூரண ஆதரவு அவசியம்.

No comments:

Post a Comment