Saturday, December 13, 2014
துடெல்லி::அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பேசும்போது, ‘‘சமீபத்தில் 5 தமிழக மீனவர்களை விடுவித்ததற்கு எங்கள் தலைவிக்கும், பிரதமருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார். அப்போது அவர் ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று கூறியதற்கு தி.மு.க. உறுப்பினர் ஒருவர் அ.தி.மு.க. தலைமை பற்றி ஏதோ ஒன்றை கூறினார்.
இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க-தி.மு.க. உறுப்பினர்கள் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பினரும் கூச்சல் போட்டனர். தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கிக்கொண்டனர். வி.மைத்ரேயன் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் தி.மு.க. உறுப்பினர்களின் இருக்கைகளை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை இருக்கைகளில் அமரும்படி துணைத்தலைவர் குரியன் கேட்டுக்கொண்டார். ஆனாலும் எழுந்து நின்று அவர்கள் கூச்சல் போட்டபடி இருந்தனர்.
அப்போது அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக அவையில் இருந்து வெளியேறினார். பின்னர் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தும், துணைத்தலைவர் குரியனும் அவர்களை சமாதானப்படுத்தினார்கள். ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, ‘‘நாம் அவையின் கவுரவத்தை காக்க வேண்டும். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அவரவர் கருத்தை மட்டும் தெரிவிக்கலாம். ஆனால் உணர்ச்சிவசப்படக் கூடாது’’ என்றார். ஆட்சேபகரமான வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் குரியன் உத்தரவிட்டார்.
நவநீதகிருஷ்ணன் பேசும்போது, ‘‘மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண இரு வழிகள் உள்ளன. ஒன்று கச்சத்தீவை இலங்கையிடமிருந்து நிரந்தரமாக மீட்பது. இதற்காக ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இரண்டாவதாக ஜெயலலிதா கேட்டுக்கொண்டபடி மீன்பிடி தொழிலின் முன்னேற்றத்துக்காக ரூ.1,520 கோடியும், பராமரிப்பு செலவுக்காக ரூ.10 கோடியும் உடனடியாக ஒதுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
திருச்சி சிவா பேசும்போது, ‘‘தமிழக மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கே வராத தொடர்கதையாக உள்ளது. 5 தமிழக மீனவர்களை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம். ஆனால் நேற்று முன்தினம் 43 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சகம் மீன்பிடிப்புக்கான எல்லைப் பகுதி மற்றும் கச்சத்தீவு பிரச்சினை போன்றவை ஏற்கனவே தீர்வுகாணப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) பேசும்போது, பிரதமரை குறிப்பிட்டு இங்கு கருத்துகள் கூறியதால் இந்த பிரச்சினையில் பிரதமர் பதில் அளித்திருக்க வேண்டும் என்றார்.
அதற்கு ரவிசங்கர் பிரசாத், இந்த விவகாரத்தில் அனைத்து கவலைகளையும் அரசு பகிர்ந்துகொள்கிறது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

டெல்லி மேல்-சபையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது
செய்யப்படுவது குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது
குறித்தும் விவாதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment