Wednesday, December 3, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதுள்ள தனிப்பட்ட கோபம் காரணமாக, வெளிநாடுகளிடம் பணம் வாங்கிகொண்டு நாட்டை பாதாளத்தில் தள்ளுகிறார் சந்திரிகா: பொதுபல சேனா!

Wednesday, December 03, 2014
இலங்கைஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதுள்ள தனிப்பட்ட கோபம் காரணமாக, வெளிநாடுகளிடம் பணம் வாங்கிகொண்டு நாட்டை பாதாளத்தில் தள்ளுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க முயற்சிக்கிறார் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
 
எதிர்வரும் பொதுதேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேடியாக நாம் ஆதரவை வழங்குவோம் என ஒருபோதும் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ ஆதரவு வழங்குவது எமது நோக்கமல்ல.
 
நாட்டின் தேசிய பாதுபாப்பு மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே நாம் செயற்படுகின்றோம். வெளிநாட்டின் சூழ்ச்சிகளுக்கு அமைய வெளிநாடுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றார். எனவே இதற்கு ஒருபோதும் இடமளியோம் என்றார்.
 

No comments:

Post a Comment