Monday, December 15, 2014
வாஷிங்டன்::ரஷ்ய அதிபர் புதின் வருகையால் ஒபாமா இந்திய பயணத்தில் பாதிப்பு இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் இந்தியா வருகை தந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது ரூ.12 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இநஅத நிலையில் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகை தரவுள்ளார்.
தற்போது அமெரிக்க உறவில் சுமூக நிலை இல்லை. எனவே புதின் வருகையால் அமெரிக்க அதிபர் ஒபாமா வின் இந்திய பயணம் பாதிக்கும் என்று கருத்து நிலவியது. இதற்கு அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் பானர் ஜென் சாகி பதில் அளித்தார். அதில் அதிபர் புதின் வருகையால் ஒபாமா பயணத்தில் எந்த பாதிப்போ, மாற்றமோ இருக்காது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு இந்தயா ஆதரவாக இல்லை. எனவே, புதின் வருகையால் ஒபாமாவின் இந்திய பயணம் பாதிக்காது. ரஷ்யாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதே போன்று இதே கோரிக்கையை அனைத்து நாடுகளுக்கும் வலியுறுத்தி வருகிறது. ரஷ்யா விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் ஆன உறவை கண்காணித்து வருகிறோம் என்றார்.

No comments:
Post a Comment