Wednesday, December 24, 2014

இரத்த குழாயில் உள்ள கொழுப்பை குறைக்கும் உணவுகள்!!!

Wednesday, December 24, 2014
சென்னை::தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனால் ஒருவரின் வாழ்நாள் எண்ணிக்கையும் குறைகிறது. அதனால் முக்கியமாக இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாக உள்ளது.
இத்தகைய உணவுகள் இரத்த குழாயில் உள்ள கொழுப்பை குறைத்து இதயத்திற்கு வலுவூட்டுகின்றன.
heart_001

நெல்லிக்காய்
தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
நாட்டு நெல்லி, மலை நெல்லி என்று சொல்லக்கூடிய, அளவில் உள்ள பெரிய நெல்லிக்காய்தான் வைத்தியத்திற்கானது. பொதுவாக, நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாப்பதுடன் கொழுப்பைக் கரைக்கும். அந்த வகையில் கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரிசெய்யக்கூடியது.
இஞ்சி
இஞ்சியை சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். இஞ்சியை துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்து வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம், ஜீரணக்கோளாறு, சளி பிரச்னை உள்ளிட்ட உடல்கோளாறுகள் சரியாகும். முக்கியமாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்.
heart_002

பூண்டு
பூண்டும் ரத்த அழுத்தத்தை சரிபண்ணக்கூடியது. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலு கிடைக்கும்.
heart_003

உலர் திராட்சை
இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். இப்படி செய்தால் உடனடியாக இதய படபடப்பு அடங்குவதோடு காலப்போக்கில் இதயம் பலப்படும்.
heart_004

No comments:

Post a Comment