Monday, December 15, 2014

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நல்லாட்சி வராது. மாறாக சந்திரிகா ரணில் சம்மந்தன் ஆட்சியேவரும். (மெடம் சேர் ஆட்சியே வரும்): உதய கம்மன்பில!

Monday, December 15, 2014
இலங்கை::எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன  ஆட்சிக்கு வந்தால்  நாட்டில் நல்லாட்சி வராது. மாறாக சந்திரிகா  ரணில் சம்மந்தன்    ஆட்சியேவரும். அதாவது  நாட்டில் சநதிரிகா  ரணில் தலைமையிலான   மெடம் சேர் ஆட்சியே வரும் என்று    மேல் மாகாண சபை உறுபபினரும்  ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகி   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குகின்றவருமான   உதய கம்மன்பில தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மறைமுகமாக   பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.   .அக்கட்சி ரணில் விக்ரமசிங்க உடனாவது  உடன்படிக்கை செய்திருக்கும்.   இரண்டு எம்.பி. க்களைக் கொண்டுள்ள    ஜாதிக ஹெல உறுமயவே      பொது வேட்பாளருடன்  உடன்படிக்கை செய்யும்போது    16 எம்.பி. க்களைக் கொண்டுள்ள கூட்டமைப்பு    உடன்படிக்கை செய்யாமல் இருக்குமா?  என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும்   நாட்டில் நல்லாட்சி  ஏற்படும் என்றும்  உலகின் மிகவும்    பலமான அதிகாரம் ஒன்றுக்கு  மைத்திரிபால சிறிசேன  செல்வதாகவும்   கூறுகின்றனர்.  ஆனால்  இவ்வாறு கூறுகின்றவர்களின் அரசியல் அறிவை எண்ணி நான் கவலையடைகின்றேன்.

இலங்கையில் உள்ள நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதி முறைமையானது உ லகில் மிகவும் பலம்வாய்ந்த   ஜனாதிபதி முறை அல்ல. பாராளுமன்ற முறையும்   ஜனாதிபதி முறையும்  கலந்த ஒரு முறையாகும்.  தெளிவாக கூறுவதென்றால் பாராளுமன்றத்திடம்  சிறைக்கைதியாக இருக்கும் ஒரு பதவியே இலங்கை   ஜனாதிபதி  முறைமையாகும்.

இதற்கு சில உதாரணங்களை கூறுகின்றேன்.  1994 ஆம் ஆண்டு   டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  பிரமதராக வந்தார்.  அப்போது   ஜனாதிபதியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

2001 ஆம் ஆண்டு    சந்திரிகாவின் அரசாங்கத்திலிருந்து  முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெளியேறியதும்  பாராளுமன்றத்தில்  10 உறுபபினர்களை வைத்திருந்த  ஜே.வி.பி.    அன்றைய அரசாங்கத்தை ஆட்டிப்படைத்தது.    அமைச்சர்களின் எண்ணிக்கையை  20 ஆக குறைத்து   17 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது.     ஜனாதிபதி பதவியால் ஒன்றும்  செய்ய முடியவில்லை.

2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க   ஆட்சியை பிடித்து      பிரபாகரடனுடன்     வடக்கு கிழக்கை எழுதிக்கொடுக்கும் வகையில் உடன்படிக்கை செய்தார்.   அப்போதைய ஜனாதிபதியினால்  எதனையும் செய்ய முடிவில்லை. 

இவ்வாறு  இலங்கையின் ஜனாதிபதி பதவியானது  மிகப் பாரிய பலத்தைக் கொண்டிருக்கவில்லை.       இது பிரான்ஸ் நாட்டின்  முறைமையை போன்றதாகும்.   அமெரிக்காவைப் போன்ற முறையல்ல.   பாராளுமன்றத்தினால் கட்டுப்படுத்தப்படக்கூடிய முறையே  எம்மிடம் உள்ளது.

கடந்த  15 வருடங்களாக   சந்திரிகாவையும் ரணில் விக்ரமசிங்கவையும்  ஜாதிக ஹெல உறுமய  விமர்சித்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த அணியில்    ஹெல உறுமய போய்  சேருகின்றது என்றால் சந்திரிகாவையும் ரணிலையும் விமர்சித்தமைக்காக  மன்னிப்புக் கோர தயாரா? என்று  கேட்கின்றேன்.

 நான்  அரசாங்கத்துக்கு தரப்புக்கு வநஙதமைக்காக எனது  800  மில்லியன் ரூபா  வங்கிகடன்    ரத்தாக்கப்பட்டுள்ளதாம். இதனை  ஆதாரத்துடன் நிரூபித்தால்   அவர்களுக்கு நான் இந்த  800 மில்லியன் ரூபாவை பரிசாக வழங்குகின்றேன்.

அதேபோன்று இந்நிலையில்     எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன  ஆட்சிக்கு வந்தால்  நாட்டில் நல்லாட்சி வராது. மாறாக சந்திரிகா  ரணில் சம்மந்தன்    ஆட்சியேவரும். அதாவது  நாட்டில்  சநதிரிகா  ரணில் தலைமையிலான   மெடம் சேர் ஆட்சியே வரும்.  நான   ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகுவதற்கு     நான்கு  விடய்களை முன்வைக்கின்றேன். அந்த நான்கு விடயங்களுக்கு முடியதானால் பதிலளிக்கலாம்.

100 நாட்களில் ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக   மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.   அதேவேளை    ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யப்படும் என்று    ஜாதிக ஹெல உறுயமவுடன்  உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது? இதில் எது நடக்கும்? இரண்டில் ஒன்று மட்டுமே நடக்கலாம்.

இதுவரை காலமும்   ஜாதிக ஹெல உறுமயவினால் விமர்சிக்கப்பட்டுவந்த    சந்திரிகா மற்றும் ரணில் ஆகியோரிடம்   நல்லாட்சி கிடைக்குமா?   100 நாட்களில்  நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்டு நாடு துண்டு துண்டுகளாக பிரிந்தால்   அதற்கு யார் பொறுப்புக்கூறுவது?

கட்சி்யைவிட   நாடு முக்கியம் என்பதாலேயே நான் இந்த முடிவை எடுத்தேன். ஜாதிக ஹெல உறுமயவை உடைக்கவேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. அதனால்தான் நான் பொதுச் செயலாளரிடம் மட்டும் கூறிவிட்டு  கட்சியைவிட்டு   வெளியேறினேன்.

கடந்த 2005  ஆம் ஆண்டு     மஹிந்த ராஜபக்ஷ  அப்போதைய ஜனாதிபதியாக இருந்த  சந்திரிகாவையும் எதிர்த்துக்கொண்டு   எங்களுடன் உடன்படிக்கை செய்தார்.

 2002 மற்றும்  2004 காலப்பகுதியில் நாட்டை    குழிதோண்டிப் புதைத்த ரணில் விக்ரசிங்க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக நாங்கள்    மஹிந்த ராஜபக்ஷவுடன் உடன்படிக்கை செய்தோம்.   அன்று  சந்திரிகா   சமஷ்டிக்காக முன்னின்றார். ஆனால் நாங்கள்   மஹிந்த ராஜபக்ஷவை  2005 ஆம் ஆண்டில் ஒற்றையாட்சி என்ற விடயத்துக்குள் கொண்டு வந்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மறைமுகமாக   பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.   வெளிப்படையாக  ஆதரவு வழங்க முன்வந்தால்       சிங்கள வாக்குகள் கிடைக்காது என்பதால்     எதிரணி  இதனை தந்திரமாக கையாள்கி்னறது. 

குறைந்த பட்சம்       கூட்டமைப்பு  ரணில் விக்ரமசிங்க உடனாவது  உடன்படிக்கை செய்திருக்கும்.   இரண்டு எம்.பி. க்களைக் கொண்டுள்ள    ஜாதிக ஹெல உறுமயவே      பொது வேட்பாளருடன்  உடன்படிக்கை செய்யும்போது    16 எம்.பி. க்களைக் கொண்டுள்ள      தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு    உடன்படிக்கை செய்யாமல் இருக்குமா?

No comments:

Post a Comment