Wednesday, December 17, 2014

இலங்கை மீனவர்கள், படகுகளை நாங்கள் விடுவிக்கிறோம்; தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க, அவர்களை வலியுறுத்துங்கள்: பிரதமருக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்!

Wednesday, December 17, 2014
சென்னை::இலங்கை மீனவர்கள், படகுகளை நாங்கள் விடுவிக்கிறோம்; தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க, அவர்களை வலியுறுத்துங்கள்' என, பிரதமருக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
 
பிரதமர் மோடிக்கு, முதல்வர் எழுதிய கடித விவரம்: தமிழக பிடியில் உள்ள, 30 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்குமாறு, தமிழக தலைமைச் செயலருக்கு, இம்மாதம் 1, 11ம் தேதிகளில், வெளியுறவுத் துறை செயலர் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல், இலங்கை பிடியில் உள்ள, 66 தமிழக மீனவர்கள், மற்றும் 81 மீன் பிடி படகுகளை விடுவிக்க வேண்டும். இந்திய - இலங்கை மீனவர்கள், பரஸ்பரம் விடுவிக்கப்படும் நிகழ்வுகளில், தமிழக அரசு, மத்திய அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது.
 
தற்போது, இலங்கை மீனவர்கள், தங்கள் குடும்பத்துடன், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில், மனிதாபிமான அடிப்படையில், இம்மாதம், 22ம் தேதி, 30 இலங்கை மீனவர்கள், 19 படகுகளை விடுவிக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த, 66 மீனவர்கள், மற்றும் 81 படகுகளை விடுவிக்க, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment