Tuesday, December 23, 2014

படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை: பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கருத்து பாரதூரமானது: ஜீ. எல். பீரிஸ்!

Tuesday, December 23, 2014
இலங்கை::இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச் சாட்டுக்களை விசாரிக்க உள்ளக நீதி விசாரணையை ஆரம்பிக்கவிருப்பதாக எதிரணி வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மேலதிக விளக்கம் கோரியுள்ளது.

வெளிநாட்டு செய்திச் சேவைக்கு எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால வெளியிட்டுள்ள அபிப்பிராயமானது தூரநோக்குடைய விடயமாக கருதப்படுவதனால் அதனை அவர், எவ்வாறு நியமித்து செயற்படுத்தவுள்ளார் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஆயுதப் படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உள்ளக நீதி விசாரணை மன்றமொன்று நியமிக்கப் படுமென்ற தனது நோக்கை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு ஊடகங்களுக்குப் பிரஸ் தாபித்துள்ளார்.

இந்த விடயம் தூரநோக்குடனான பல விளைவுகளை உள்ளடக்கியதாகும்.
இந்த விசாரணையின் தன்மை பற்றி எதிர்க் கட்சி வேட்பாளர் விளக்க வேண்டும். இந்த விசாரணை மன்றின் அதிகாரங்கள், நோக்கு பற்றி தெரிவிக்க வேண்டும்.

ஆயுதப் படையினரை விசாரணைக்கு அழைக்கும் அதிகாரம் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை அணுகும் விடயத்தில் முழுமையான, மாற்றமான ஓர் அணுகுமுறை கையாளப்படுமென எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சரணடையும் கோரிக்கைள் தொடர்பாகவும் எதிர்க் கட்சி வேட்பாளர் விளக்கமளிக்க வேண்டும். உலகளாவிய ரீதியில் இந்தக் கோரிக்கைகள் ஏற்கக் கூடியவை அல்ல என நிரூபிக்கப்பட்டு உள்ளது.

சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் அரபுலகும், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள நாடுகளின் பெரும்பாலான நாடுகளும் இந்தப் பிரேரணையில் இடம்பெற்றுள்ள நெருக்கடியான விடயங்களுக்கு ஆதரவு வழங்க மறுத்துள்ளன.
இந்த விடயத்தில் குறுகிய அரசியல் இலாபம் தேடும் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தொடர்பாக அறியும் உரிமை நாட்டுக்கு உண்டு.

ரோம பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடாததால் நமக்கு ஆபத்து இல்லை என அவர் தவறான கருத்தைக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் பீரிஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment