Tuesday, December 23, 2014

எங்கள் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே: ஹிஸ்புல்லாஹ்!

Tuesday, December 23, 2014
இலங்கை::அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோரும் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தான் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்; போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எல்லோரும் இந்த நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்திய இந்த தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு உறுதியான ஆட்சியை செய்யக் கூடிய நமது பிரதேசத்தின அபிவிருத்திக்காக நிறைய பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கின்ற ஒரு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்தும் ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எல்லோரும் எடுத்து இருப்பதாகவும் அதே போன்று மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் உங்களோடு இருக்கின்றேன் எந்த  சூழ்நிலையிலும் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே போன்று இன்னும் பல உள்ளுராட்சி தலைவர்கள் எங்களுடன் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் அவரைப் பற்றி அறிவிப்போம்.

அதே போன்று ஏனைய உள்ளுராட்சி மன்ற உறுப்பிர்கள் கட்சியினுடைய இரண்டாவது இடத்தில் இருக்கின்ற சட்டத்தரணி சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹிட் உட்பட எல்லோரும் இந்த தீர்மானத்தை ஒருபோதும் ஏற்றுப்கொள்ளவில்லை எனவும் மறைமுகமாக யாருடனும் கலந்துரையாடாமல் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு  இத் தீர்மானத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுத்து இருக்கின்றோம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்..
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு பிழையான முடிவாகுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் அ. இ. ம. கா. இன் தேசிய அமைப்பாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக எடுத்த முடிவையடுத்து காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி விக்கையில்:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்போது எமது கட்சி முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுடன் அதனை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்குறுதியளித்தது.

அதில் பிரதானமாக ஜாதிக்க ஹெல உருமய கட்சியினால் தடுத்து நிறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக கட்டப்பட்ட 500 வீடுகளையும் மீள முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக குழுவொன்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. இந்த கட்டத்தில் அ. இ. ம. கா. தலைவர் மைத்திரிபாலவை ஆதரிக்க தீர்மானித்துள்ளமை மிகுந்த கவலை யளிக்கிறது.

இந்த முடிவை நான் மறுப்பதுடன் நான் உட்பட கொழும்பு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ். எச். அஸ்வர் உட்பட காத்தான்குடி நகர சபை மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றோம்.
றிசாட் பதியுதீன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது. எமது தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இவ் ஊடவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் அஸ்பர்,பிரதித் தவிசாளர் ஜெஸீம்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர்ä,அலி சப்ரி,சியாட்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment