Tuesday, December 16, 2014

கனடியப் பாராளுமன்றத்தில் புலிகளின் மாவீரர் தினத்தையொட்டி ஆற்றிய உரை: பூதாகரமாகும் ராதிகா விடயம்!

Tuesday, December 16, 2014
ரொறன்றோ::கனடியப் பாராளுமன்றத்தில் புலிகளின் மாவீரர் தினத்தையொட்டி ஆற்றிய உரை: பூதாகரமாகும் ராதிகா விடயம். 
 
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் கனடியப் பாராளுமன்றத்தில் புலிகளின் மாவீரர் தினத்தையொட்டி ஆற்றிய உரை தொடர்பாக கனடிய அரசில் பிரதமருக்கு அடுத்தபடியானவர் எனக் கருதப்படும் ஜேசன் கென்னி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த தனது பதிவில்,
 
புதிய ஜனநாயகக் கட்சி தமிழ்ப் புலிகளின் நினைவு தினத்தையும் கனடியப் படைவீரர்களின் நினைவையும் ஒப்பிட்டது ஒரு நம்புதற்கரிய அவமரியாதையான விடயம்” எனக் குறிப்பிட்டுள்ளதோடு,
 
புலிகளின் மாவீரர் தினத்தை உருவாக்கிய தமிழ்புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்றும், அவர்களே தற்கொலைத் தாக்குதல்கள், பொதுமக்களை வேண்டுமென்றே கொல்லுதல், சிறார்களை படையில் இணைத்தல்,
 
மற்றும் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுதல், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றமை மற்றும் தங்களை எதிர்க்கும் தமிழர்களைக் கொல்வது போன்றவற்றைச் செய்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரால் கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பதிவு கீழே தரப்பட்டுள்ளது!
It’s unbelievably offensive that the NDP would draw a parallel between Remembrance Day and a Tamil Tiger commemoration.”

For the record, the Tamil Tigers (who created “Martyrs’ Day”) is a banned terrorist group that invented the tactic of suicide bombing, intentionally killed civilians, recruited child soldiers, engaged in ethnic cleansing, killed Indian Prime Minister Rajiv Gandhi, and murdered Tamil rivals.”

No comments:

Post a Comment