Wednesday, December 31, 2014

சீரற்ற காலநிலை பாதுகாப்பு படையினர் அனர்த நிவாரண சேவையில்! Army Troops Continue to Take Care of Flood Victims

Wednesday, December 31, 2014
இலங்கை::
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரவு மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தல், நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கென சுமார் 20 ஆயிரம் முப்படை வீரர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும்இ பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 22 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 409 தற்காலிக முகாம்களிலுள்ள சிவில் அதிகாரிகளுடன் இணைந்தே 20 ஆயிரம் முப்படை வீரர்களும் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிவாரண மற்றும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினதும் மாவட்ட செயலாளர்களினதும் வேண்டுகோள்களுக்கு அமைய முப்படை வீரர்கள் தமது பணிகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இயற்கை அனர்த்தம், வெள்ளப் பாதிப்பு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.

பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இங்கு மேலும் விளக்கமளிக்கையில் :-

வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கமான ஒன்றாகும்.

அந்த அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தமது பணிகளை முன்னெடுத்து வரும் அதேசமயம், நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள் நிவாரண பணிகளை மேலும் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன்இ அது தொடர்பிலான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு விஷேட குழு ஒன்றையும் நியமித்துள்ளார்.

விஷேட குழு நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அனர்ந்த முகாமைத்துவ மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேசிய மட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்யதல், நிவாரணங்களை வழங்குதல் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இதற்கு தேவையாள நிதியும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

முப்படை வீரர்களின் நடவடிக்கைகள்

இந்நிலையில் மாவட்ட, பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் சிவில் நிர்வாக நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு 5000 முப்படை வீரர்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு 15 ஆயிரம் முப்படை வீரர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவம்

முதற்கட்டமாக அனர்த்தத்தில் சிக்கி தவிப்பவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தல்இ பிறகு அவர்களை பாதுகாப்பான இடங்களில், முகாம்களில் தங்க வைத்தல், நிவாரண உதவிகள், மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

படையணிகளும் முகாம்களும்

மொத்தமாக 409 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு படையணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு படையணியில் சுமார் 500 தொடக்கம் 800 பேர் வரை அங்கம் வகிக்கின்றனர். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 147 தற்காலிக முகாம் அமைக்க்ப்பட்டுள்ளதுடன் கிழக்கு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் 7 படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். வன்னி பிரதேசத்தில் 86 தற்காலிக முகாம் அமைக்க்ப்பட்டுள்ளதுடன் வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் 6 படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பிரதேசத்தில் 13 தற்காலிக முகாம் அமைக்க்ப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் 2 படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று மத்திய பிரதேசத்தில் 105 தற்காலிக முகாம்களும் மேற்கு பிரதேசத்தில் 58 தற்காலிக முகாம்களும் அமைக்க்ப்பட்டுள்ளன.

கடற்படை

இராணுவத்தினர் தரைவழியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதேசமயம் கடற்படையினர் படகுகள் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுழியோடிகள் அடங்கிய 29 மீட்புக்குழுக்களும் 67 படகுகளும் மீட்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படையினர் மாத்திரம் இதுவரை 314 பொது மக்களை மீட்டெடுத்துள்ளதுடன் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர்.

விமானப் படை

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்பு பணிகளுக்கான செல்லும் படைவீரர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேவை ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ள ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையங்கள்

அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சகல நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ள போதிலும் நல்லெண்ண அல்லது மனிதாபிமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென நட்டின் பல மாகங்களிலுள்ள பொது மக்கள் பொது அமைப்புக்கள் நிவாரண பொருட்களுடன் மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர் இது மிகவும் வரவேற்க தக்கது எனினும் இந்த பொருட்கள் உரிய முறையில் சம்பந்தப்பட்ட மக்களை சென்றடைவதில்லை, சில சமயம் தூர பிரதேச மக்களுக்கு கிடைப்பதில்லை இதனை கருத்திற் கொண்டு இதுபோன்று கொண்டுவரப்படும் நிவாரண பொருட்களை முறையாக கொண்டுச் சேர்க்கும் நோக்குடன் ஐந்து பிரிவுகளில் நிவாரண பொருட்களை சேகரிக்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவென இணைப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

அவர்களின் விபரம், தொலைப்பேசி இலக்கங்கள் தொடர்பான விபரங்கள் பினவருமாறு :-

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் கிழக்கு

லெப். கேர்ணல் ரவீந்திர மார்காவிட்ட (மின்னேரிய) 0765303515, மேஜர் உபுல் பண்டார (22வது படைப் பிரிவு – திருகோணமலை) 0773049878, 0263266266, லெப். கேர்ணல் ரொணி பெர்ணான்து (23வது படைப் பிரிவு – பூணானை) 0771916387, 0273278973, லெப். கேர்ணல் ஹரேண் வீரசிங்ஹ (24வது படைப் பிரிவு – அம்பாறை) 0775371151, 0113090718.

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் வன்னி

கேர்ணல் சந்திர பண்டார (21வது ப
 
 
டைப் பிரிவு – அநுராதபுரம்) 0766907226.
 

 
பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் மத்தி

லெப். கேர்ணல் இளங்ககோன் (112வது படையணி – பதுளை) 077800470

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் மேற்கு

மேஜர் துஷார குசும்சிறி (மாவட்ட செயலகம் – சிலாபம்) 0718470933

மேஜர் சம்பத் நல்லப்பெரும (மாவட்ட செயலகம் – குருநாகல்) 0773487588

பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் கிளிநொச்சி

லெப். கேர்ணல் ஷாந்த ஜயசூரிய (பாதுகாப்பு படை தலைமையகம் – இரனமடு) 0765303526
 
Army Troops Continue to Take Care of Flood Victims in Wanni, Kilinochchi, East, Central and West!
 
Sri Lanka Army troops under the Security Force Headquarters (SFHQs) Wanni, Kilinochchi, East, Central and West, are continuing their rescue and relief operations with commitment for the benefit of flood victims by assisting the conduct of medical clinics, restoration of disrupted roads, threatened and burst tank bunds, provision of security and administrative support for surveys, transport of victims and relief items, coordination of Navy and Air Force services for emergencies, etc in the past two days (Dec 28-29).

In the Wanni, more than 49,816 displaced and affected people, belonging to 15,200 families in Anuradhapura and Mannar areas, have been housed in alternative public places with supply of cooked meals, medical and sanitary facilities after housing them in 86 relief centres in both districts.

Nearly 3000 troops of 6 Battalions are deployed to take care of them at present and another contingent of troops, is on standby for any emergency at Anuradhapura although the floods were now fast receding.

Similarly, troops of the Security Force Headquarters - Kilinochchi (SFHQ-KLN) are attending to the needs of the flood victims from Paliarupalam area after relocating them in 13 relief centres. A total of 2,571 victims are receiving the protection of about 400 Army troops as at present.

In the eastern theater, a total of 57,995 flood victims from Morawewa, Kanthalai, Serunuwara, Verugal, Thambalagamuwa, Kinnia, Mutur, Lankapura, Thamankaduwa, Medirigiriya, Eraurpattu, Vellaveli and Koralaipattu South, have been accommodated in 147 relief centres with the services, provided by about 3,500 troops of the Security Force Headquarters - East (SFHQ-E). As per the statistics, 7 houses were completely destroyed in the area and 99 more houses were partly or slightly damaged, turning them unsuitable for living.

On Friday (26), SFHQ-E organized 4 medical clinics inside those relief centres and provided medical assistance to some 240 affected people. 5 Sri Lanka Army Medical Corps members on the directions of the Forward Maintenance Area (FMA) Headquarters, held those mobile clinics at Novodya School in Medirigiriya, Viharagama temple in Medirigiriya, Nawahirigama community hall and Thabala Alhidiya Vidyalaya with a view to ensuring their best health standards.  

Meanwhile, a total of 26,300 flood victims from Kandy, Matale, Badulla, Nuwara Eliya, Hambantota and Moneragala districts that come under the responsibility of the Security Force Headquarters - Central (SFHQ-C) have been housed in 105 relief centres with the support of the Disaster Management Centre. Around 1000 troops of the SFHQ-C are taking care of those victims whose some 1,288 houses have been affected in the floods.

Meanwhile, troops of the Security Force Headquarters - West (SFHQ-West) has deployed about 500 troops to take care of about 13,094 flood victims, now relocated inside 58 relief centres in Puttalam and Kurunegala Districts.

Those troops during Dec 22 - 28, repaired and restored Surukkulama and Pahalakulama tank bunds and rescued a large number of affected people including some in the Wariyapola area.

On the directions and close supervision of the Commander of the Army, Lieutenant General Daya Ratnayake, Major General Boniface Perera, Commander, SFHQ-W, Major General Sudantha Ranasinghe, Commander, SFHQ-KLN, Major General Lal Perera, Commander, SFHQ-E, Major General Mano Perera, Commander, SFHQ-C and Major General U.A.B Medawela, Commander, SFHQ-West are spearheading all those relief projects in close cooperation with Disaster Management Centre, District Secretariats, Provincial authorities, Navy, Air Force and Police personnel, representatives of civil organizations, etc.

No comments:

Post a Comment