Thursday, December 11, 2014
கெய்தர்ஸ்பர்க் - அமெரிக்காவில் வீட்டின் மேல் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் வீட்டுக்குள் இருந்த 3 பேரும், விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள வாஷிங்டன் புறநகர் பகுதியான கெய்தர்ஸ்பர்கில் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் இரண்டு மாடிகளை கொண்ட மரத்தாலான அந்த வீ ட்டின் மேல்தளம் வெடித்து சிதறியது. மேலும் வீட்டின் பெரும்பாலான பகுதி எரிந்து சாம்பலானது. விபத்தை தொடர்ந்து விமானத்தில் இருந்த மூவரும் உயிரிழந்ததாக அறிவித்த அதிகாரிகள்
வீட்டில் இருந்த மேரி கெம்மல், அவரது மகன்கள் கோல், டெவன் ஆகிய மூவரையும் பல மணி நேரம் தேடி வந்தனர். இறு தியில் மூவரும் உயிரிழந்த நிலையில் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள குளியலறையில் கண்டறியப்பட்டனர்.
இரு குழந்தைகளையும் புகையிலிருந்து பாதுகாப்பதற்காக அவர்களை அணைத்தபடி மேரி உயிரிழந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேரியின் கணவரும் மகளும் விபத்தின் போது வீட்டில் இல்லாததால் உயிர் தப்பியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.



No comments:
Post a Comment