Thursday, December 11, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 450,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 450,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தை பொறுத்த வரையில் 450,132 வாக்காளர்கள் தேர்தலிலே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு இதற்காக யாழ்.மாவட்டத்திலே 526 வாக்களிப்பு நிலையங்களும் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
மேலும் இந்த வாக்களிப்பு நடவடிக்கையின் ஊடாக வாக்குகள் எண்ணும் நடவடிக்கையும் கூட இந்த முறையும் யாழ்.மத்திய கல்லூரியில் 44 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு அதனூடாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

No comments:
Post a Comment