Tuesday, December 23, 2014
சென்னை::இலங்கை மீனவர்கள் 30 பேர் புழல் சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர். இந்திய கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், இந்திய கடற்படையினரால் கடந்த 6 மாதத்துக்கு முன்னர் சிறை பிடிக்கப்பட்டனர். அதன்பின் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரி இந்திய, இலங்கை தூதரகங்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் சுமார் 30 பேரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து 30 மீனவர்கள் நேற்று மதியம் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள், விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர்

No comments:
Post a Comment