Thursday, December 11, 2014
இலங்கை::அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மஹிந்த சிந்தனையின் அடிப்படையிலும், 2015ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்pன்படி 2014/2015 ஆம் ஆண்டு பெரும்போக விவசாயிகளுக்கான விதை நெல் மானியம் வழங்கும் நிகழ்வு நேற்று 2014.12.10 புதன்கிழமை பொத்துவில் பிரதேச செயலகத்தில் பொத்துவில் பிரதேச செயலாளர் கௌரவ என்.எம்.எம்.முஸர்ரத் அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

சுமார் 23,000 ரூபா மானியமும், விவசாயக் கருத்திட்டத்தின் அடிப்படையில் 56 பேருக்கு நீர் இரைக்கும் இயந்திரமும், கோழி வளர்ப்புத்pட்டத்தின் கீழ் 28 பேருக்கு கோழிக்குஞ்சு மற்றும் கூரைத் தகடுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன்
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான கௌரவ அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கிராமிய மின்சாரம், வீடமைப்பும் நிர்மாணமும் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ எம்.எஸ்.உதுமாலெவ்வை, சிறப்பதிதிகளாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளர்களான கௌரவ ஏ.பதுர்கான ஆசிரியர், சட்டத்தரணி எம்.எம் பஃஜி, பொத்துவில் பிரதேச சபையின் துணைத் தவிசாளர் ஏ.எம்.தாஜுதீன் ஆசிரியர், பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.மர்சூக் ஆசிரியர், பொத்துவில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், திவிநெகும முகாமையாளர், கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர் .
.

No comments:
Post a Comment