Saturday, November 15, 2014

மலேசியாவில் இருந்து திரும்பிய புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கட்டுநாயக்கவில் கைது!

Saturday, November 15, 2014
இலங்கை::மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஒருவர் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கிளிநொச்சியை சேர்ந்த வெள்ளையன் இராசகுமார் என்ற இவர் 
 
புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் என்று படையினரால் இனம் காணப்பட்டிருந்தார். எனினும் இறுதி யுத்தத்தின் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாமல், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார் என்று கூறப்படுகிறது.
 
மலேசியாவில் இருந்து  மீண்டும் நாடு திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment