Sunday, November 16, 2014
இலங்கை::இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது, புலிகளுக்கு அப்போதைய நோர்வே அரசு நிதியுதவி அளித்து வந்தமை தொடர்பாக, அந் நாட்டு அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் நோர்வே அரசாங்கம் எவ்வாறு தீவிரவாதிகளுக்கு நிதியளித்தார்கள் என்பது தொடர்பில் ஆதாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக நோர்வேயின் அமைச்சர் மற்றும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேம் புலிகளுக்கு ஆதரவளித்ததாக அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும் சொல்ஹேம் தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை்கு எதிராக ஆதாரங்களைக் கொடுப்பதற்குத் திட்டமிட்டு வருகிறார் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment