Saturday, November 22, 2014

அழகிய நாடு - சுபீடசமான எதிர்கலம்’ பத்திரிகை வெளியீடு!

     
     
அழகிய நாடு - சுபீடசமான எதிர்கலம்பீ பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று (நவ.20) லேக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்
 
இந்நிருவனத்தின் பணிப்பாளரான திரு. சீலரத்ன செனரத்தினால் வரவேற்புரை நடாத்தப்பட்டதுடன் லேக் ஹவுஸ் நிருவனத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பன்துல பத்மகுமாரவினால் பாதுகாப்புச் செயலாளருக்கு அழகிய நாடு பத்திரிகைய வழங்கி வைக்கப்பட்டது.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் லேக் ஹவுஸ் ஆகியன இணைந்து வெளியிடும் பிஅழகிய நாடுபீ பத்திரிகை இன்று முதல் லேக் ஹவுஸ் பத்திரிகைகளான தினகரன், தினமின, டெய்லி நிவுஸ் ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்படவுள்ளதுடன்
 
 இது தற் பொழுது நாட்டில் காணப்படும் அபிவிருத்திகள் தொடர்பான ஆக்கங்கள், புகைப்படங்கள் மற்றும் நேர்காணல்கள் என அபிவிருத்தி சம்பந்தமான பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் உத்தியோக பூர்வ இணையத்தளமாக (ஞுஞுஞு.ஞ்குகூஙூஹஙிஹசுஹஙூ.ஙீஙி/ஙீஹசூசூஹஙூஹசுஹஞ்ஹஙி). அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றுகையில்: கொழும்பு நகரை மக்கள் வாழக்கூடிய சிறந்த நகரமாக மாற்றியமைப்பதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.
 
மேலும் இநிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அத்திகாரிகள், முப்படைத்தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள், இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment