Monday, November 24, 2014

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது: ஹெல உறுமய!

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என  ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது:-

Monday, November 24, 2014
இலங்கை::ஜனாதிபதி, பாதுகப்புச் செயலாளர் அல்லது பாதுகாப்பு படையினருக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை அனுமதிக்க முடியாது என கட்சி குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் ஜனநாயகம் மலினப் படுத்தப்படுவதனையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இலங்கையில் நல்லாட்சியும் சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி நல்லாட்சியை வலியுறுத்தி நடத்தி வரும் வீதிப் பிரச்சார நடவடிக்கைளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டே ரயில் நிலையம் மற்றும் பொரளை பிரதேசங்களில் ஜாதிக ஹெல உறுமய கட்சி துண்டுப் பிரசூரங்களை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment