Friday, November 14, 2014
சென்னை::காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் புதிய கட்சியை
தொடங்கியுள்ளார். புதிய கட்சியின் பெயர், கொடி குறித்து 28-ந்தேதி
திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் அறிவிக்க உள்ளார்.
இதையொட்டி தினமும் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் தனது
ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
வர்த்தக காங்கிரஸ், வணிகர் சங்கம், கலை இலக்கிய அணி, வக்கீல் அணி நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து புதிய கட்சியில் பணியாற்ற இருப்பதாக தெரிவித்தனர். அவர்களை ஜி.கே.வாசன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் ஞானதேசிகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், திரைப்பட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் சைதை ரவி, வில்லிவாக்கம் சுரேஷ், இ.சி.சேகர், புரசை ரமேஷ்கண்ணன்,
வர்த்தகர் காங்கிரஸ் நிறுவன தலைவர் ஆர்.எஸ்.முத்து, கலை இலக்கிய அணி முன்னாள் செயலாளர் ரவி பாரதி, கத்திப்பாரா ஜெனார்த்தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்ததும் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- புதிய கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து வீட்டீர்களா?
பதில்:- இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் சட்டத்திற்கு உட்பட்டு எங்கள் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். தற்போது அங்கிருந்து வாங்கி வரப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனை விரைவில் தேர்தல் ஆணையத்திடம் வழங்க இருக்கிறோம்.
கேள்வி:- எப்போது புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும்?.
பதில்:- 28-ந்தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொடி, சின்னம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
கேள்வி:- உங்கள் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து கூறி வருகிறாரே?
பதில்:- எங்கள் கட்சிக்கு அனைத்து தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து கட்சிகளுடன் நாங்கள் நல்லுறவுடன் இருக்கிறோம். எங்களை தொடர்பு கொண்டு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கட்சி பெயர் அறிவிப்பு விழாவுக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரபலங்களையும், ஆதரவாளர்களையும் சந்தித்து கட்சியை வலுப்படுத்துவேன். மக்கள் பணியிலும், அரசியல் பணியையும் முன் எடுத்துச்செல்வோம். தேர்தல் நேரத்தில், எங்கள் கட்சி முன்னணி கட்சியாக விளங்கும்.
கேள்வி:- தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
பதில்:- தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 5 தமிழக மீனவர்களையும் நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை வேறு சிறைக்கு மாற்ற வேண்டாம். விடுதலை செய்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்ட கூடாது.
கேள்வி:- இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை தங்கள் நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கூறியிருக்கிறாரே?
பதில்:- இலங்கையில் இருக்கும் தமிழர்களின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அவர்களின் அச்சத்தை போக்க வேண்டும். மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அந்த நாடு செயல்பட வேண்டும்.
கேள்வி:- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்து இருக்கிறாரே?
பதில்:- நான் மத்திய மந்திரியாக இருந்தபோது இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டேன். தற்போது அதை பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து செயல்படுத்த முயற்சி எடுத்து இருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
ஜி.கே.வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

No comments:
Post a Comment