Wednesday, November 12, 2014

மலேசிய விமானம் மாயமாகிவிட்டதாக விமான நிறுவனம் அறிவிப்பு!!

Wednesday, November 12, 2014
கோலாலம்பூர்:: கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான மலேசிய விமானம், மாயமானதாக மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர்.

இந்த விபத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது. விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்தது.

இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டன. இருந்தும் விமானத்தின் உதிரி பாகங்களோ அல்லது விபத்தில் இறந்தவர்களின் உடலோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது விபத்துக்குள்ளான விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இந்த அதிகாரபூர்வமான அறிவிப்பை மலேசிய ஏர்லைன்ஸ் மூத்த அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

இதை அறிந்ததும் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகள் குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment