Monday, November 10, 2014
பெர்லின்::உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருவது குறித்து சோவியத் யூனியன் முன்னாள் அதிபர் மிகயீல் கோர்பசேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு, மேற்கு ஜெர்மனி இடையிலான பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு அந்த நாடு ஒன்றுபட்டதன் நினைவு நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பெர்லின் சென்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் உக்ரைன் காரணமாக ரஷ்யாவுக்கும், ஜெர்மனிக்கும் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். ஜெர்மனியும், ரஷ்யாவும் ஒன்றையொன்று புரிந்து கொண்டு செயல்பட்டவரைதான் அனைத்தும் நன்றாக இருந்தது என்பது வரலாறு நமக்கு சொல்லி கொடுக்கும் பாடம். அதை உணர்ந்து பதட்டத்தை அதிகரிப்பதற்கு பதில் உறவை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
உக்ரைனில் அரசு படையினருடன் சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக ரஷ்யா மீது ஜெர்மனி உள்ளிட்ட மேலைநாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் ஜெர்மனி சென்றுள்ள கோர்பசேவ் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்

No comments:
Post a Comment