Friday, November 21, 2014

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக!!

Friday, November 21, 2014
இலங்கை::ஆளும் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பான இறுதி முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தன்னை பொதுவேட்பாளராக தெரிவுசெய்தமைக்கு  நன்றி தெரிவித்துள்ளார்
 
அவர் அங்கு  மேலும் கூறுகையில்
2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது.
நான் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குவேன்.  100 நாட்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்டுவேன்.
 
இந்த சமயத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மறந்து விட முடியாது மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
 
நாட்டு மக்கள் வாழ்வதற்கு சிறந்த பொருளாதாரம் இல்லை.எனது  பிரதேச விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
 
நான் பொது வேட்பாளராக போட்டியிடுவேன். முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சுதந்திரமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்வரும் தேர்தல் வெற்றிக்காக நாளுக்கு நாள் நாங்கள் அடியெடுத்து வைப்போம். மக்களின் பிரார்த்தனை நிறைவேற அர்ப்பணிப்போம்.
 
இந்த சந்தர்ப்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் குறித்து ஞாபகப்படுத்த விரும்புகிறேன் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்தேன்.
 
அமைச்சராக பதவி வகித்த போது இவ்வளவு அழுத்தங்கள் என்றால் நாட்டு மக்கள் எவ்வாறான அழுத்தங்களை எதிர்நோக்குவார்கள் என எனது குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பராவாயில்லை நாட்டு மக்களுக்கு நன்மை செய்யுமாறு மனைவி பிள்ளைகள் கோரியிருந்தனர்.
 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வேன். 17ம்திருத்தச் சட்டத்தை மீளவும் அமுல்படுத்துவேன் என்றார்

No comments:

Post a Comment