Friday, November 21, 2014

புலிகளால் கடந்த 10 வருடத்துக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டவர்களின் எச்சங்களைத் தேடும் நடவடிக்கை!

Friday, November 21, 2014
இலங்கை::புலிகளால் கடந்த 10 வருடத்துக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டவர்களின் எச்சங்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 பொலிஸ் புலனாய்வாளர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80  பேர் இவ்வாறு எரிக்கப்பட்டனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை பொலிஸ்நிலைய புலனாய்வுப் பொறுப்பதிகாரியான ஆய்வாளர் பி.ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 அரச படையினர் மற்றும் பொலிஸார், ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் வைத்து, புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் சடலங்கள் பழைய ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டதாக, புலிகளின் முன்னாள் போராளிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

இந்த தகவல்களின் அடிப்படையிலேயே, அந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதியைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதலை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவு ஆய்வாளரான ஜெயரட்ணம் கொழும்பில் விடுதியொன்றில் வைத்து கடந்த 2004 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

அவர் கடல்வழியாக  புலிகளால் வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணைகளின் பின்னர் கொல்லப்பட்டார் என்று படைத்தரப்பு ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது...
 
புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டதாக கூறப்படும் இடங்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (19) நேரில் சென்று பார்வையிட்டார்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டிசுட்டான் பகுதியில் அமைந்துள்ள இந்திமடு, சமளன்குளம் ஆகிய இடங்களை நீதவான் சென்று பார்வையிட்டார்.நீதவானுடன் கொழும்பிலிருந்து வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் குழுவும் சென்றிருந்தது.

No comments:

Post a Comment