Wednesday, November 12, 2014

100-வது பிறந்த நாளன்று ஆகாயத்திலிருந்து குதித்த மூதாட்டி!!

Wednesday, November 12, 2014
நியூயார்க்::அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹோவெஸ் கேவ் பகுதியைச் சேர்ந்த எலீனர் கன்னிங்ஹாம் என்ற மூதாட்டி கடந்த சனிக்கிழமை தனது 100-வது பிறந்த நாளை ஆகாயத்திலிருந்து குதித்து கொண்டாடினார்.
 
இதன்மூலம், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ் சாதனையை முறியடித்துள்ளார். புஷ் தனது 90-வது பிறந்த நாளை ஆகாயத்திலிருந்து குதித்து கொண்டாடினார். இவர் இத்தகைய சாகசத்தில் ஈடுபட்டது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு தனது 90-வது வயதில் இந்த சாதனையை செய்துள்ளார். நியூயார்க் நகரின் மையப் பகுதியில் உள்ள ஸ்கோ ஹரீயில் உள்ள தனது பேத்தியுடன் வசித்து வருகிறார் கன்னிங்ஹாம்.
 
முன்னதாக, கன்னிங்ஹாமின் உடல்நிலை ஆகாயத்திலிருந்து குதிப்பதற்கு ஏதுவாக இருப்பதாக அவரது மருத்துவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment