Monday, October 20, 2014

ஸ்வீடன் கடற்பகுதியில் ரஷ்ய கப்பல் ஊடுருவல்: ஐரோப்பிய கூட்டமைப்பு அதிர்ச்சி!

Monday, October 20, 2014
ஹெல்சிங்கி::ஸ்வீடன் நாட்டு கடற்பகுதியில் வெளிநாட்டு ஆழ்கடல் சோதனை ஒப்பந்தத்துக்கு எதிராக கடந்த சில நாட்களாக 3 இடங்களில் ரஷ்யாவின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் சோதனையில் ஈடுபட்டன என்று ஸ்வீடன் குற்றம் சாட்டியது. இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
 
ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமை சுற்றிய கடற்பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்தத் தீவுகளில் உள்ள கடற்பகுதிகளில் ஆழ்கடலுக்குள் சந்தேகத்துக்குரிய நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் இருப்பதாக ஸ்வீடன் பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன.இதைத் தொடர்ந்து, ஸ்வீடன் நாட்டு கடற்பகுதியில் கடற்படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆழ்கடலுக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்யாவின் சிறிய ரக அதிநவீன நீர்மூழ்கி கப்பலை அங்கிருந்து விரட்டினர்.
 
அத்துடன் ஸ்வீடன் நாட்டு ஆழ்கடல் பகுதிக்குள் சந்தேகத்துக்குரிய வகையில் நீர்மூழ்கி கப்பலை கண்காணிக்கும் பணியில் 100 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆழ்கடலுக்குள் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிய நீர்மூழ்கி கப்பலை நேற்று ஒருவர் படம்பிடித்து வெளியிட்டார். இது லோக்கல் பத்திரிகைகளில் வெளியானது.ஸ்வீடன் கடல் பகுதியில் ரஷ்யாவின் சிறிய ரக அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் அத்துமீறி நுழைந்திருப்பது ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
ஸ்வீடன் நாட்டு கடற்பகுதிக்குள் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் அத்துமீறி நுழையவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு துறை நேற்றிரவு மாஸ்கோவில் மறுப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment