Tuesday, October 7, 2014

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை: வளர்ப்பு மகன் திருமண விவகாரம் குறித்து ஜெத்மலானி வாதம் செய்து வருகிறார்!!

Tuesday, October 07, 2014
பெங்களூர்::வளர்ப்பு மகன் திருமணத்திற்கான செலவை ஜெயலலிதா ஏற்கவில்லை-ஜெத்மலானி
பெண் வீட்டார்தான் திருமணச் செலவை ஏற்றனர்-ஜெத்மலானி வாதம்
வளர்ப்பு மகன் திருமண விவகாரம் குறித்து ஜெத்மலானி வாதம் செய்து வருகிறார்

ஜெயலலிதாவுக்காக மீண்டும் ராம் ஜெத்மலானி வாதம் ஆரம்பம்
சசிகலா, ஜெயலலிதாவின் பினாமி என்று நிரூபிக்க‌ எந்த சாட்சியங்களும் இல்லை - சசிகலா தரப்பு வாதம்!
ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஜாமீன் மனு - விசாரணை மீண்டும் தொடர்கிறது

ஜெ.,ஜாமின் மனு விசாரணை மீண்டும் 2.30க்கு துவங்கியது
-மதியம் 2.30 மணிக்கு வாதத்தை ஒத்தி வைத்தது ஹைகோர்ட்
-சசிகலா ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு ஆதாரமே கிடையாது: தேசாய் வாதம்
-ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை முடிந்த நிலையில் சசிகலா தரப்பு வாதம் தொடங்கியது
-மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் வாதம் செய்து வருகிறார்
-ஒரு மணிநேரம் நடந்த ஜெயலலிதா ஜாமீன் மனு விவாதம்
-சென்னையில் கன்னடர்களை மிரட்டும் வகையில் அதிமுகவினர் போஸ்டர் வைத்த சம்பவம் எதிரொலி
-சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை போனில் தொடர்புகொண்ட பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி
-கன்னடர்களுக்கு பாதுகாப்பு தருமாறு ஜார்ஜிடம் கேட்டுக்கொண்ட எம்.என்.ரெட்டி
-ஜெயலலிதாவிடமுள்ள நகைகள் 1971ம் ஆண்டில் பெற்றோரிடமிருந்து வந்தது
-குடும்ப நகை என்ற வாதத்தை சிறப்பு நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை-ஜெத்மலானி வாதம்
-ஜெயலலிதா சட்டத்தை மதிக்கும் பெண்மணி, கோர்ட் கூறியபோதெல்லாம் நேரில் ஆஜராகியுள்ளார்-ஜெத்மலானி
-ஜெயலலிதாவின் உடல் நலம் சரியில்லை என்பதையும் பரிசீலித்து ஜாமீன் வழங்க வேண்டும்
-லில்லிதாமஸ், ரவி பாட்டீல் வழக்குகளில் தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்கிய உதாரணம் உள்ளது-ஜெத்மலானி
-லாலு பிரசாத் வழக்கை மேற்கோள் காட்டி வாதிட்ட ராம்ஜேத்மலானி
-5 ஆண்டு தண்டனை பெற்ற லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
-அதேபோல ஜெயலலிதாவையும் விடுவிக்க ராம்ஜேத்மலானி கோரிக்கை
-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு மீதான ராம் ஜெத்மலானியின் வாதம் நிறைவு
-சசிகலா ஜாமீன் மனு வாதம் தொடங்கியது
-ராம்ஜேத்மலானி வாதம் முடிந்தது - பவானி சிங் வாதம் தொடங்கியது
-ஜாமீன் வழக்கு விசாரணை நடைபெறும் கர்நாடக ஹைகோர்ட் ஹாலுக்குள் அதிமுகவினர் கூச்சல், குழப்பம்
-அதிமுகவினர் கூச்சலால் ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிபதி சந்திரசேகர் கோபம்
-வழக்கிற்கு தேவையற்றவர்களை வெளியே அனுப்ப நீதிபதி உத்தரவு
-தண்டனையை ரத்து செய்ய கோரும் விசாரணை தாமதம் ஆகும் என்பதால் ஜாமீன் தர வேண்டும்- ஜெத்மலானி
-ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா எங்கும் தலைமறைவாகிவிட மாட்டார்- ஜேத்மலானி
-4 வருட தண்டனை என்பதால் அரசுக் கருத்தைக் கேட்கத் தேவையில்லை
-அரசுத் தரப்பு கருத்தைக் கேட்காமலேயே ஜாமீனில் விடுவிக்கலாம்- ராம்ஜேத்மலானி வாதம்
-ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் பவானிசிங் எதிர்ப்பு
-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
-ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும், அடுத்தகட்ட விசாரணை அங்கே நடக்க வேண்டும்
-கர்நாடக ஹைகோர்ட் பதிவாளரிடம் கர்நாடக சட்ட பாதுகாப்பு கமிட்டி சார்பில் மனு தாக்கல்
-கர்நாடகாவில் அதிமுகவினரால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதால் ஹைகோர்ட் தலையிட கோரிக்கை
-ஜெயலலிதா வழக்கை அவசர வழக்காக எடுக்க முடியாது
-வரிசைப்படியே விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவிப்பு
-ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்
-ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கர்நாடக வக்கீல்கள் முடிவு
-நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மூத்த வக்கீல் தர்மபால் தலைமையிலான வக்கீல்கள் குழு தயார்
-நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது குறித்து கர்நாடக அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்கிறது வக்கீல் குழு
-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
-சிறை வளாகத்தில் குவிந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், தொண்டர்கள்
-சிறை வளாகத்தில் 1500 போலீசார் குவிப்பு
-காலையிலேயே ஜாமீன் மனு விசாரணையை எடுக்க கோரிக்கைவிடுக்க ஜெயலலிதா வக்கீல்கள் முடிவு.
 
ஜெயலலிதா ஜாமீன் மனு: ஜாமீன் தரலாம் ஜெயலலிதா ஓட மாட்டார்: ராம்ஜேத்மலானி வாதம்!!
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் உள்ளிட்ட மனுக்கள் மீதான வக்கீல்களின் வாதம் தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதிட்டு வருகிறார். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது.

எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம். ஜெயலலிதாவின் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மாநில முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா.

ஜாமீன் வழங்கினால் அவர் எங்கும் ஓடி விட மாட்டார். ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் நீதிபதி சந்திரசேகரா முன்பு வாதிட்டார்.

ஜெயலலிதாவின் மனுக்கள் 73வது வழக்காக நீதிபதி சந்திரேசகரா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. ஜெயலலிதாவின் மனுக்களை முதல் வழக்காக விசாரிக்க நீதிபதி சந்திரசேகரா மறுத்து விட்டார்.

எனவே வரிசைப்படியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 10 நாட்களாக சிறையில் அடைபட்டிருக்கும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இன்றாவது ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் அதிமுகவினர் உள்ளனர்.

ஜாமீன் மனுக்கள் தவிர, தனி நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு, தீர்ப்பை ரத்து செய்யும் மனு, சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை நிறுத்தி வைப்பது ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் நான்கு பேரும் தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் ஜாமீன் கோரி கடந்த 29ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனுக்கள் 30ம் தேதிக்கு விசாரணைக்கு வந்தன. விடுமுறை கால நீதிபதி ரத்னகலா விசாரணை நடத்தினார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் யாரும் இல்லாத காரணத்தால் விசாரணையை அதிரடியாக அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி ரத்னகலா.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக வக்கீல்கள் உடனடியாக இந்த மனுவை விசாரிக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலையிட்டார். அவரது உத்தரவின் பேரில் அக்டோபர் 1ம் தேதி அதே நீதிபதி ரத்னகலா பெஞ்ச் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அக்டோபர் 1ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் விசாரணையே நடத்தாமல் 2 நிமிடங்களிலேயே வழக்கை ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கும் என்று கூறி விட்டு போய் விட்டார் நீதிபதி ரத்னகலா.
 
இந்த பின்னணியில் இன்று ரெகுலர் பெஞ்ச் முன்பு ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்கள் விசாரணைக்கு வந்துள்ளன. சசிகலா சார்பில் வித்யாசாகர், மணிசங்கர் ஆகியோரும், இளவரசிக்கு அஸ்மத் பாஷா, அசோகன் ஆகியோரும், சுதாகரனுக்கு மூர்த்தி ராவ், சீனிவாசன் ஆகியோரும் ஆஜராகியுள்ளனர்.
 
ஜெயலலிதா செல்வாக்கு மிக்க தலைவர்.. ஜாமீன் தந்தால் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம்: பவானி சிங் கடும் எதிர்ப்பு!!
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காரணமாக வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
மேலும் அவருக்கு 4 ஆண்டு தண்டனைதான் என்பதால் அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார்.

ஆனால் ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று முற்பகலில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை விவாதத்திற்கு வந்தபோது முதலில் அவரது வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதிட்டார்.

அவர் வாதிடுகையில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை.

இதுதொடர்பாக லில்லி தாமஸ், ரவி பாட்டீல் ஆகியோரது வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்கலாம். ஜெயலலிதா முதல்வராக இருந்தவர். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு ஜாமீன் அளித்தால் அவர் எங்கும் தப்பியோடி விட மாட்டார்.

அவர் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பவர் ஆவார். கோர்ட் உத்தரவிட்டபோதெல்லாம் அவர் நேரில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும்.

ஜெயலலிதாவிடம் உள்ள நகைகள் 1971ம் ஆண்டு அவரது பெற்றோர்களிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்தவையாகும். அவரது குடும்ப நகை.

ஆனால் இந்த வாதத்தை தனி நீதிமன்றம் கண்டு கொள்ளவே இல்லை என்று அவர் நீதிபதி சந்திரசேகரா முன்பு வாதிட்டார்.

பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ராம்ஜேத்மலானி வாதிட்டார். இதையடுத்து பவானி சிங்கின் வாதம் தொடங்கியது

பவானி சிங் வாதம்:

பவானி சிங் வாதிடுகையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வாதிடுகையில், ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர்.

எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அப்படி ஜாமீன் தந்தால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் பவானி சிங்.
ஜெயலலிதாவின் மனுக்கள் 73வது வழக்காக நீதிபதி சந்திரேசகரா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன.

ஜெயலலிதாவின் மனுக்களை முதல் வழக்காக விசாரிக்க நீதிபதி சந்திரசேகரா மறுத்து விட்டார். எனவே வரிசைப்படியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 10 நாட்களாக சிறையில் அடைபட்டிருக்கும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

எனவே இன்றாவது ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் அதிமுகவினர் உள்ளனர். ஜாமீன் மனுக்கள் தவிர, தனி நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு, தீர்ப்பை ரத்து செய்யும் மனு, சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை நிறுத்தி வைப்பது ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் நான்கு பேரும் தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் ஜாமீன் கோரி கடந்த 29ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இந்த மனுக்கள் 30ம் தேதிக்கு விசாரணைக்கு வந்தன. விடுமுறை கால நீதிபதி ரத்னகலா விசாரணை நடத்தினார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் யாரும் இல்லாத காரணத்தால் விசாரணையை அதிரடியாக அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி ரத்னகலா.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக வக்கீல்கள் உடனடியாக இந்த மனுவை விசாரிக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலையிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் அக்டோபர் 1ம் தேதி அதே நீதிபதி ரத்னகலா பெஞ்ச் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 1ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் விசாரணையே நடத்தாமல் 2 நிமிடங்களிலேயே வழக்கை ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கும் என்று கூறி விட்டு போய் விட்டார் நீதிபதி ரத்னகலா.
 
இந்த பின்னணியில் இன்று ரெகுலர் பெஞ்ச் முன்பு ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்கள் விசாரணைக்கு வந்துள்ளன. சசிகலா சார்பில் வித்யாசாகர், மணிசங்கர் ஆகியோரும், இளவரசிக்கு அஸ்மத் பாஷா, அசோகன் ஆகியோரும், சுதாகரனுக்கு மூர்த்தி ராவ், சீனிவாசன் ஆகியோரும் ஆஜராகியுள்ளனர்.
 
ஜெயலலிதாவுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர கர்நாடக வக்கீல்கள் முடிவு!!
 
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுவதை கண்டித்து, ஜெயலிலதா உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கர்நாடக வக்கீல்கள் திட்டமிட்டுள்ளனர்.

18 வருடங்கள் நீண்ட இழுத்தடிப்புடன் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 27ம்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இந்த தீர்ப்பை வழங்கினார்.

ஆனால் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். தினம் ஒரு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதாவது நீதிமன்றம் தவறு, தாங்கள்தான் சரி என்பது இந்த போராட்டத்தின் உட்கருத்து. மூத்த வக்கீலான ஆச்சாரியா இந்த போராட்டங்கள் குறித்து கருத்து கூறியபோது, தீர்ப்பு சாதகமாக வந்தால் வரவேற்கவும் கூடாது, எதிராக வந்தால் போராடவும் கூடாது.

இதுதான் நீதிமன்ற நடைமுறை என்று கூறியிருந்தார். ஆயினும் தமிழகத்தில் ஏனோ போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அகில இந்தியாவும், தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை எள்ளி நகையாடி வருகிறது. இந்நிலையில், அடுத்தகட்டமாக தீர்ப்பு கூறிய நீதிபதியையே விமர்சனம் செய்து அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வகையில், குன்ஹா விமர்சனம் செய்யப்படுகிறார். அவரை கன்னடர் என்று ஒரு குரூப்பும், அவரை கிறிஸ்தவர் என்று மற்றொரு குரூப்பும் சேற்றை வாரி இறைத்து வருகிறது.
இந்த போராட்டங்களை மீடியாக்களின் புண்ணியத்தால் கர்நாடக பார் கவுன்சிலும் கவனித்துக்கொண்டுதான் உள்ளது. இந்நிலையில்தான், பொறுமை இழந்துபோன கர்நாடக வக்கீல்கள் சிலர், இப்போராட்டங்கள் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

மூத்த வக்கீல் தர்மபால் தலைமையிலான வக்கீல்கள் குழு கர்நாடக ஹைகோர்ட்டில், இதுகுறித்து மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
அதிமுகவினர் போராட்டங்கள் குறித்து சிறையில் இருந்தபடி, தினமும் 3 ஆங்கில பத்திரிகை, 2 தமிழ் பத்திரிகைகளை படிக்கும் ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்கும்.

ஆயினும் அவர் போராட்டம் நடத்த வேண்டாம் என்று இதுவரை கூறவில்லை. எனவே ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வக்கீல் குழு முடிவு செய்துள்ளது.

இருப்பினும் இந்த வழக்கில் மூலம், தமிழகத்தில் இருப்பதால், கர்நாடக ஹைகோர்ட்டில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியுமா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமாரிடம், தர்மபால் தலைமையிலான வக்கீல்கள் குழு கருத்து கேட்டுள்ளது. இதை அட்வகேட் ஜெனரல் பரிசீலனை செய்து வருகிறார்.
அவரது பதிலை பொறுத்து, வக்கீல்கள் குழு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment