Saturday, October 4, 2014

அதிமுகவினர் சென்னை கோவில்களில் யாகம் சிறப்பு பூஜைகள்!

Saturday, October 04, 2014
சென்னை::முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சென்னை தமிழகம் முழுவதும் மகா யாகங்கள், விசேஷ அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா விடுதலையாக தமிழகமே பிரார்த்தனை செய்கிறது.
 
மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். வணிகர்கள் கடைகளை அடைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
 
மனித சங்கிலி, ஊர்வலம் போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன.
தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
 
தங்களது தினசரி ஊதியத்தை இழந்து ஜெயலலிதாவுக்காக மக்கள் உண்ணாவிரதம் போன்ற அறவழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சென்னை அண்ணா நகர் பகுதி செனாய் நகர் பகுதியில் இருக்கும் மகாமேரு ஸ்ரீ சக்ர பகவதி அம்மன் ஆலயத்தில் கணபதி யாகம், சிவம் யாகம், மகாலட்சுமி யாகம், துர்கா யாகம், நவக்கிரக யாகம், அதர்வன பத்ரகாளி பிரத்தியங்கரா யாகம் அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா தலைமையில் நடைபெற்றது.
 
இந்த யாகத்தில் அண்ணா தி.மு.க. மாணவரணி செயலாளர் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., பகுதி அண்ணா தி.மு.க. செயலாளர் ஏ.இ.வெங்கடேசன் எம்.சி., சரஸ்வதி ரங்கசாமி, டி.தசரதன், என்.எஸ்.விஜயன். எஸ்.அமீர்பாஷா எம்.சி., ஜீவாதீனன் எம்.சி., வ.சுகுமார்பாபு, எம்.சி., செல்வி எம்.சி., மல்லிகா எம்.சி., பி.எல்.ராதாகிருஷ்ணன், நா.ரா.பாபு, கூடல் வே.கோவிந்தன், கோ.தமிழ்ச்செல்வம், இ.நந்தகோபால், என்.கந்தன், கே.குப்பம், கே.முருகன், ஏ.எஸ்.பச்சையப்பன், மு.ஸ்ரீராம், வி.ஜனார்த்தனன், ஜி.குப்புசாமி, பி.கண்ணன், கே.ஓ.கேசவன், லலித்குமார் சர்மா, கே.பெருமாள், சேட்பாய், சுலைமான், நாசர், இளவரசி முத்து, வள்ளி, சகிலா மாபுபாஷா, பார்வதி, கஸ்தூரி,
 
கே.கருணாமூர்த்தி, ஜெ.சமாதானம், இ.புஷ்பா, பரிதாபேகம், இ.உமா, இ.தமிழரசி, மாலா, சகிகலா, கிரேசி, ஆர்.விஜயா, தமிழரசி, சத்யா, ராணி, காஞ்சனா, மல்லிகா, ஜி.கஸ்தூரி, எல்.லலிதா, என்.முன்னாபாய் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.சக்ரபகவதி அம்மன் கோவில் மிகுந்த சக்தி வாய்ந்த கோவில் ஆகும். யாகத்தின் போது அமைச்சர் கோகுல இந்திராவுக்கு அம்மன் அருள் வந்தது. சிறிது நேரம் கண்ணீர் மல்க மயக்க நிலையில் அவர் அப்படியே இருந்தார். பின்னர் பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
 
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சென்னை மேற்கு மாம்பலம் அயோத்திய மண்டபத்தில் மாபெரும் சண்டி யாகம் நடைபெற்றது. இந்த யாகம் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. மந்திரங்கள் ஓத நடந்த இந்த மகா யாகத்தில் பகுதி செயலாளர்கள் தி.நகர் ஏழுமலை, நுங்கை மாறன் எம்.சி., ஏ.இ. வெங்கடேசன் எம்.சி., வி.கே.பாபு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, கவுன்சிலர்கள் பி. சின்னையன், புஷ்பா நகர் ஆறுமுகம் எம்.சி., எல்.ஐ.சி. மாணிக்கம் எம்.சி., அமீர்பாட்சா, வீடியோ சரவணன், சாந்தி பாஸ்கர், பத்மினி சுந்தரம், சீதா, அலுமேலு, அமாவாசை, தி.நகர் கருணாகரன், பத்மநாபன், டி.யூ.சி.எஸ். சீனிவாசன், லிபர்டி ராஜு, அண்ணா நகர் என்.எஸ். விஜயன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
 
நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ., ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்.சி., புஷ்பா நகர் ஆறுமுகம் எம்.சி., சக்தி எம்.சி., பி. சின்னையன் எம்.சி., சாந்தி பாஸ்கர், வழக்கறிஞர் ஆர். சதாசிவம், நுங்கை டி. மனோகர், ஏ. இளையமாறன், விவேக், ராஜு மேஸ்திரி, மெக்கானிக் மோகன், நுங்கை மூர்த்தி, ரகீம், சாலை உமாபதி, ராமமூர்த்தி, எம். சேகர் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
 
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலும் அபிஷேகம், சிறப்பு பூஜைகளுக்கு தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன் ஏற்பாடு செய்திருந்தார். டாக்டர் மைத்ரேயன் எம்.பி., அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ., டி.சிவராஜ் எம்.சி., இ. பன்னீர்செல்வம் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment