Sunday, October 12, 2014

புலிகளின் வங்கிகளில் இருந்து படையினரால் கைப்பட்ட பெருந்தொகை தங்க நகைகள் உரியவர்களிடம் கையளிக்கப்பபட்டன!

அனம
அனம 2
land
goud 2
groud3
groud1
Sunday, October 12, 2014
வரலாற்றில் முதற்தடவையாக  இன்று காலை  ஒரே தடவையில் 20000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது  புலிகளின் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
'பிரச்சினைகளற்ற நிலத்தின் உரித்துரிமை அபிவிருத்திக்கான அடித்தளமாகும்' என்ற தொனிப்பொருளில் இக்காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா- ரிஷாத் பதியுதீன்- சந்திரசிறி கஜதீர- வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி- பிரதி அமைச்சர் சிரிபால கம்லத்- பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக்- முருகேசன் சந்திரகுமார்- ஏ.எச்.எம் அஸ்வர்- ஆகியோர் கலந்துகொண்டனர்...
 
வட மாகாணத்தில் போர் நடவடிக்கையின்போது புலிகளின் வங்கிகளில் இருந்து படையினரால் கைப்பட்ட பெருந்தொகை தங்க நகைகள் உரியவர்களிடம் கையளிக்கப்பபட்டன .  புலிகளின் வங்கிகளில் ஆட்கள் இவற்றை அடகு வைத்து இருந்தனர். இந்நிலையில் இவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க அரசு . தீர்மானத்துக்கு அமைய ஜனாதிபதி யின்  விஜயத்தில் இவை சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப் பட்டன 
 
2300 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள். அடையாளத்துக்காக கூட்டத்தில் வைத்து 25 பேர் ஜனாதிபதியிடம் இருந்து அவரவர் நகைகளை பெற உள்ளார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள இராணுவ கட்டளைத் தலைமையகங்கள் நடத்தி இருந்த விசாரணைகள் மூலம் நகைகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, பெயர் விபரங்கள் பட்டியல் இடப்பட்டு உள்ளன. உரிமை கோருபவர்கள் இல்லாத நகைகள் மத்திய வங்கியிடம் சட்ட முறைப்படி கையளிக்கப்பட உள்ளன என தெரிவிக்ப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment