Sunday, October 12, 2014
தமிழ் தேசியக் கூட்ட மைப்பு ஒரு தனிக்கட்சியாகப் பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்ட மைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா லண்டனில் விருந்துபசார நிகழ்வொன்றின் போது தெரிவித்தார் என நம்பகரமான செய்திகள் தெரிவித்தன.
ரெலோ” இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால் தங்கள் இயக்கத்தை கலைக்கப் போகிறார்கள் எனக் கூறியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கட்டமைப்பு பதிவு செய்யப்படுமா? எனக் கேட்டதற்கே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அப்படியானால் இதனை வெளிப்படையாக மக்கள் முன் சொல்லத் தயாரா” என்று கேட்போது “இதனைத் தெரிந்துதான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். ஒரு கட்சியாக செயற்படுவதற்கும், கூட்டமைப்பாக செயற்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள்தான் இதுபோன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்” என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தனிக் கட்சியாகப் பதிவு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது” என்றும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்வோம்” என்ற வாக்குறுதியை நானோ எனது கட்சித் தலைவர்களோ ஒருபோதும் வழங்கியதில்லை” என்றும் மாவை சேனாதிராஜா அங்கு தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் “அவரவர் விடுகின்ற அறிக்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கி ஒன்றுபட்டு செயற்பட லேண்டும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள நிலையில் மாவை சேனாதிராஜா அது தொடர்ந்தும் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எப். (சுரேஷ் அணி) தமிழர் விடுதலைக் கூட்டணியாகவே தனித்து இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment